The Odd Questions – Akbar Birbal Stories in Tamil:-ஒரு நாள் அரசவைல அக்பர் சில கேள்விகள் கேட்டாரு
- இப்ப இருக்கிறது பின்னாடி எப்பவுமே இருக்கிறது எது?
- இப்ப இல்லாதது பின்னாடி எப்பவுமே இல்லாதது அது எது?
- இப்ப இருக்கிறது பின்னாடி எப்பவுமே இல்லாதது எது?
இந்த மாதிரி விசித்திரமான கேள்வியை அங்கு இருக்கிறவங்க யாரும் கேட்டதில்லை
அக்பர் தொடர்ந்து சொன்னாரு இந்த மூணு கேள்விகளுக்கும் உதாரணத்தோட பதில் சொல்லுங்க அப்படி சொல்றவங்களத்தான் இனிமே நான் மந்திரியா வச்சுக்க போறேன் அப்படின்னு சொன்னாரு
இந்த கேள்விகளுக்கு அங்கு இருக்கிற யாராலயும் பதில் சொல்ல முடியல
அப்பத்தான் பீர்பால் எந்திரிச்சாரு
இந்த கேள்விகளுக்கு நீங்கள் விட தெரிஞ்சிக்க வேண்டும்னா என் கூட மாறு வேஷத்துல வாங்க நான் உங்களுக்கு உதாரணத்தோடு இந்த கேள்விகளுக்கு விடை சொல்றேனு சொன்னாரு
உடனே அக்பரும் பீர்பாலும் மாறு வேஷம் போட்டுட்டு நகர்வலம் வந்தாங்க
அப்ப ஒரு பணக்காரர் ஏழை எளிய மக்களுக்கு உதவி செஞ்சுகிட்டு இருந்தாரு
உடனே பீர்பால் அவர்கிட்ட போயி நான் அரசவைல காவல்காரனா இருக்கேன் நீங்க இது மாதிரி உதவி செஞ்சு நிறைய பேரை சோம்பேறியா ஆக்கிக்கிட்டு இருக்கீங்க அதுக்கு தண்டனையா இப்போ உங்களுக்கு சவுக்கடி கொடுக்கப் போறோம்னு சொன்னாரு
உடனே அந்த பணக்காரர் ஏழைகளுக்கு உதவி செய்றதுக்கு எனக்கு சவுக்கடினா அதை நான் வாங்கிக்கிட தயார் அப்படின்னு சொன்னாரு
உடனே திரும்பி வந்த பீர்பால் அக்பர் கிட்ட பாத்தீங்களா அரசே நீங்க கேட்ட முதல் கேள்விக்கு விடை கிடைச்சு போயிடுச்சு
நல்ல வளம் இந்த பணக்காரர் கிட்ட இருக்கு நல்ல செய்கைகள் செய்கிற இவருக்கு நல்ல வளம் எப்போதும் இருக்கும் இதுதான் உங்க முதல் கேள்விக்கான உதாரணம் அப்படின்னு சொன்னாரு
அடுத்ததா அவங்க ரெண்டு பேரும் கொஞ்சம் தூரம் நடந்து போனாங்க அப்ப அவங்க ஒரு பிச்சைக்காரரை பார்த்தாங்க உடனே பீர்பால் அவர் கிட்ட போயி ஐயா எங்களுக்கு ரொம்ப பசிக்குது சாப்பிட ஏதாவது தாங்க அப்படின்னு கேட்டாரு
அதுக்கு அந்த பிச்சைக்காரர் முடியாது போங்க போங்கனு சொல்லி அனுப்பி விட்டார் அரசே இதுதான் உங்க இரண்டாவது கேள்விக்கான பதில்
இவர்கிட்ட நல்ல வளம் இல்ல இவரோட இந்த கருமையான எண்ணத்துனால இவர்கிட்ட எப்பவுமே வளம் வந்து சேராது இதுதான் உங்க ரெண்டாவது கேள்விக்கான உதாரணம் அப்படின்னு சொன்னாரு
கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா ஒரு மடம் வந்துச்சு அங்க ஒரு முனிவர் தவம் செஞ்சுகிட்டு இருந்தாரு
அவர்கிட்ட போன பீர்பால் ஒரு பை நிறைய பணத்த வச்சாரு
அத பாத்த அந்த முனிவர் ,இது எனக்கு வேணாம் ,இது ஆபத்தானது எனக்கு வேணாம்னு சொல்லிட்டாரு
உடனே பீர்பால் சொன்னாரு அரசே இதுதான் உங்க மூணாவது கேள்விக்கான பதில்
இவருகிட்ட வளம் இப்ப நிறைய இருக்கு ,ஆனா இவரோட செய்கையால எப்பவும் பணம் சேர போறது கிடையாது
எல்லாம் புரிஞ்சு அரசர் நிம்மதியா அரண்மனை வந்து சேர்ந்தாரு