மந்திர பானை – The Magic Pot Kids Moral Story:- ஒரு ஊருல விவசாயி இருந்தார் ,அவர் ஒருநாள் தன்னோட நிலத்துல உழுதுகிட்டு இருந்தார் ,அப்ப ஒரு பானை தென்பட்டுச்சு

உடனே அதுக்குள்ள புதையல் இருக்குமான்னு பாத்தாரு ,ஆனா அந்த பானைக்குள்ள ஒண்ணுமே இல்ல ,தொடர்ந்து அந்த இடத்த தோண்டி புதையல் இருக்கான்னு தேடுன்னாரு

அவருக்கு ஒண்ணுமே கிடைக்கல ,சோர்வான அவரு தன்னோட மண்வெட்டியை அந்த பனைக்குள்ள வச்சுட்டு ,மரத்தடியில் போய் ஓய்வெடுக்க ஆரம்பிச்சாரு

கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வந்து பாத்தா அந்த மண்வெட்டி 100 மண்வெட்டியா மாறியிருந்துச்சு

ஆகா இது ஏதோ மந்திர பானை போலனு சொல்லிட்டு ஒரு மாம்பழத்த எடுத்துட்டு வந்து அதுக்குள்ள போட்டாரு ,அந்த மாம்பழமும் 100 மாம்பலமா மாறுச்சு
அந்த 100 மாம்பழங்களை சந்தையில வித்து நிறைய பணம் வாங்குனாரு

வீட்டுக்கு வந்த அவர் தன்னோட மனைவி கிட்ட நடந்தத சொன்னாரு ,உடனே அவுங்க ஒரு தங்க நாணயத்த அதுக்குள்ள போட்டாங்க ,அந்த மந்திர பான அந்த ஒரு தங்க காச 100 தங்க காசா மாத்திருச்சு

அந்த மந்திர பானயோட உதவினால பணக்காரரா ஆனாரு அந்த விவசாயி ,இத பாத்த பக்கத்துக்கு வீட்டுக்காரங்களுக்கு சந்தேகம் வந்துச்சு

அது எப்படி கொஞ்ச காலத்துக்குள்ள இவரு பணக்காரர் ஆனாருன்னு எல்லோரும் சந்தேகத்தோட பேசிக்கிட்டாங்க
அதுல ஒருதர்மட்டும் விவசாயியோட வீட்டு ஜன்னல் வழியா மந்திர பனையோட சக்திய பாத்தாரு

உடனே அந்த நாட்டோட ராஜாகிட்ட பொய் மந்திர பானையை பத்தி சொன்னாரு ,ராஜாவுக்கு கோவம் வந்துடுச்சு ,அது எப்படி இந்த நாட்டுல கிடைக்குற பொருள் எல்லாம் அரசாங்கத்துக்கு சொந்தம்,

அதனால அந்த மந்திர பானையை காவலர்கள விட்டு தூக்கிட்டு வர சொன்னாரு

காவலர்களும் அந்த மந்திர பானையை தூக்கிட்டு வந்து அரசர் கிட்ட கொடுத்தாங்க ,ஆவலா அந்த பானைக்குள்ள எட்டி பாத்தாரு அரசர்

உடனே அந்த பானை குள்ள சின்னதா மாரி உள்ள விழுந்துட்டாரு ,கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா வெளிய வந்து பாத்தா 100 அரசர்கள் இருந்தாங்க

எல்லோரும் நான் தான் அரசன்னு சண்ட போட ஆரம்பிச்சாங்க ,இந்த செய்தி விவசாயிக்கு தெரிஞ்சது

உடனே தன்னோட மனைவி கிட்ட சொன்னாரு ,என்னதான் அந்த பானை நமக்கு நல்லது செஞ்சாலும் ,மாயா மந்திரங்களோட முடிவு ஆபத்துல தான் போய் முடியும்னு பெரியவங்க சொன்னது உண்மையாகிடுச்சு
ஆண்டவன் அருளால அந்த ஆபத்து நமக்கு வராம தப்பிச்சிட்டோம் ,அந்த பானை அரசரோட இடத்துல யாருக்கும் கிடைக்காம இருக்குறத்துத்தான் சரினு சொன்னாரு