The Lost King and the Emperor – காணாமல் போன அரசன்

The Lost King and the Emperor – காணாமல் போன அரசன் :- ஒரு பெரிய நாட்ட ஒரு இளம் அரசன் ஆட்சி செய்தான்

அவன் தன்னோட தந்தை இறந்ததும் அப்புறமா அவரோட வாரிசா அரசன் பதவி அடைஞ்சான்

The Lost King and the Emperor - காணாமல் போன அரசன்

அவன் ஒருநாள் வேட்டையாடி மகிழ காட்டுக்கு தன்னோட பரிவாரங்களோட போனான், அப்படி போயி நிறைய மிருகங்கள வேட்டையாடினான் ,ரொம்ப சந்தோசப்பட்ட அவன் தன்னோட பரிவாரங்கள விட்டு பிரிச்சி ரொம்ப தூரம் போய்ட்டான்

அப்பத்தான் தான் ரொம்ப தூரம் தனியா வந்துட்டதையும் , திரும்பி தன்னோட வந்த பரிவாரங்களையோ ,அரண்மனைக்கோ வழி தெரியலைங்கிறத உணர்ந்தான் ,அடடா வேட்டையாடுற மும்முரத்துல இப்படி வந்து மாட்டிக்கிட்டமேன்னு வறுத்த பட்டான்

ரொம்ப நேரம் வேட்டையாடுன அவனுக்கு ரொம்ப சோர்வா இருந்துச்சு ,நேரம் ஆக ஆக அவனுக்கு ரொம்ப பசிக்க ஆரம்பிச்சது ,ரொம்ப சோர்ந்து போன அவன் தன்னோட முயற்சிய கை விட்டுட்டு தனியா ஒரு இடத்துல உக்காந்துட்டான்

அப்பத்தான் ஒரு வயசான வேட்டைக்காரன் அந்த பக்கமா வந்தாரு ,அவர பார்த்ததும் வேகமா அவன்கிட்ட போன அரசன் ஐயா நான்தான் இந்த நாட்டோட ராஜா ,நான் என்னோட பரிவாரங்கள விட்டு பிரிஞ்சிட்டேன்

The Lost King and the Emperor - காணாமல் போன அரசன்

எனக்கு திருப்பி போக வழியும் தெரியல,ரொம்ப உடல் சோர்வாவும் இருக்குனு சொன்னான் ,அத கேட்ட வேட்டைக்காரர் சிரிச்சாரு , நாட்டையே ஆட்சி செய்யுற உனக்கு உன்ன காப்பாத்திக்கிட தெரியலயான்னு கேட்டாரு

அதுக்கு அந்த அரசன் சொன்னான் நான் என்னோட தந்தையோட மரணத்துக்கு பிறகு அரசனானேன் ,என்னால சில விஷயங்களை சரி வர செய்ய முடியல , அதுக்கான அனுபவமும் இன்னும் எனக்கு கிடைக்கலன்னு சொன்னான்

The Lost King and the Emperor - காணாமல் போன அரசன்

அத கேட்ட வேட்டைக்காரர் ரொம்ப சோர்வா இருக்க உனக்கு பசிக்குதான்னு கேட்டாரு ,அதுக்கு அந்த இளம் அரசன் சொன்னான் வழி தேடி ரொம்ப தூரம் தவறான பாதையில நடந்ததால ரொம்ப பசிக்குதுனு சொன்னான்

அப்ப பசிய தீர்த்துக்கிட எந்த முயற்சியும் செய்யலையானு கேட்டாரு ,அதுக்கு அந்த இளம் அரசன் சொன்னான் ,இந்த காட்டுல பழம் கொடுக்குற மரங்கள நான் இன்னும் பாக்கல அதனால என்னால பழம் பிடிங்கி தின்னு கூட என்னால பசியாற முடியலன்னு சொன்னான்

அப்பத்தான் அந்த வேட்டைக்காரர் ஒரு செடியை பிடுங்குனாரு ,அதோட வேர் பகுதியில நிறய கிழங்குகள் இருந்துச்சு ,அத அந்த இளம் அரசனுக்கு கொடுத்தாரு ,அத சாப்பிட்ட அரசனுக்கு அப்பத்தான் புரிஞ்சது ,அடடா பசிக்கு பழம் தேடி திரிஞ்ச நாம கிழங்கு செடிகளை பத்தி தெரிஞ்சிருந்தா எப்பவோ பசியாறி இருக்கலாமேன்னு தனக்கு தானே கேட்டுக்கிட்டான்

The Lost King and the Emperor - காணாமல் போன அரசன்

பசி ஆறுன அரசன் ஐயா உங்கள பார்த்தா ரொம்ப புத்தி சாலி மாதிரியும் ,நல்ல அனுபவ சாலியாவும் இருக்கீங்க எனக்கு அரண்மனைக்கு போகவோ , இல்லை என்னோட பரிவாரங்கள கண்டுபிடிக்கவோ உதவு செய்யுங்கன்னு கேட்டான்

அதுக்கு அந்த அரசன் தன்னோட கையில இருந்த மோதிரத்தை கொடுத்து இந்த மோதிரத்த வச்சி என்னோட ராஜாங்கத்துல என்ன வேணும்னாலும் சாதிச்சிகிட்ட முடியும் ,இத என்னோட பரிசா வச்சிக்கோங்கன்னு சொன்னான்

அத கேட்ட வேட்டைக்காரர் சொன்னாரு அப்ப இந்த நாட்ட ஆளுற உரிமைய எடுத்துக்கவானு கேட்டாரு ,அப்பத்தான் தான் அவசரப்பட்டு தவறுதலான வாக்குறுதிய கொடுத்துட்டத உணர்ந்தான் ,உடனே என்ன சொல்லுறதுனு தெரியாம அமைதியா நின்னான்

The Lost King and the Emperor - காணாமல் போன அரசன்

உடனே அந்த வேட்டைக்காரர் அந்த மோதிரத்த அந்த அரசனுக்கே திருப்பி கொடுத்துட்டு அவன்கூட சேர்ந்து நடக்க ஆரம்பிச்சாரு ,அப்ப அவன்கிட்ட உன்னோட ஆச என்னனு கேட்டாரு ,அதுக்கு அந்த வேட்டைக்காரர் சொன்னாரு நான் பக்கத்து நாட்டு அரசரை பத்தி என்னோட தந்தை சொல்லி கேள்வி பட்டிருக்கேன் ,தன்னோட புத்தி கூர்மையாலும் , அனுபவதுனாலயும் தொடர்ந்து நல்லபடியா ஆட்சி செய்யுற அவர மாதிரி ஆகணும்னு சொன்னான்

அத கேட்ட அந்த வேட்டைக்காரர் சத்தம் போட்டு சிரிச்சாரு ,நீ இளம் வயதுல அரசனானது இயற்கயான விஷயம் அல்லது உன்னோட அதிர்ஷ்டம் ,ஆனா அதுக்கான தகுதிய நீ வளர்த்துக்கிட்டே போகணும் அப்பத்தான் நீ சொல்லுறமாதிரி நல்ல அரசனா ஆக முடியும்னாரு

The Lost King and the Emperor - காணாமல் போன அரசன்

உடனே அந்த இளம் அரசன் சொன்னாரு ,எனக்குதான் நல்ல அறிவும் முதிர்ச்சியும் ,அனுபவனும் கிடைக்குறதுக்கு முன்னாடியே என்னோட தந்தை மறைஞ்சிட்டாரே ,நான் என்ன செய்வேன்னு கேட்டான் அந்த இளம் அரசன்

அதுக்கு அந்த வேட்டைக்காரர் சொன்னாரு கவனம் ,எல்லா விஷயத்துலயும் கவனம் வை ,உதாரணத்துக்கு நீ வர்ற வழியில பழ மரங்களே இல்லைனு சொன்ன ,அதுக்கு என்ன அர்த்தம்னா மனிதர்களுக்கு தேவப்படுற மரம் எங்க இல்லையோ அங்க மனிதர்கள் நடமாட்டம் இருக்காது ,

அதனால இந்த பகுதிக்கு மனிதர்கள் வர மாட்டாங்க ,இந்த பகுதியிலேயே நீ சுத்தி திருஞ்சது மிக பெரிய தவறு ,

அடுத்ததா நீ பெரிய பரிவாரங்களோட வந்ததா சொல்லுற , அமைதியான காட்டுல மனித கூட்டம் வந்தா என்ன நடக்கும் பார்வைகளும் ,மிருகங்களும் பயந்து வேறு இடத்துக்கு நகரும் அந்த சத்தத்த கேட்டு நீ உன்னோட பாதைய மாத்தி இருக்கணும்

The Lost King and the Emperor - காணாமல் போன அரசன்

அடுத்ததா சூரியனோட கதிர்கள வச்சி நேரத்த கணிச்சி இருக்கணும் ,சூரியன் இருக்குற திசையை வச்சு அரண்மனை இருக்குற திசையையும் கணிச்சு இருக்கணும்

மிருகங்களோட அடர்த்தியா அது போடுற எச்சம் மூலமா கண்டுபிடிச்சு இருந்தேனா அங்க கண்டிப்பா ஒரு தண்ணீர் வழி இருக்கும் நீ பசியாறி இருக்கலாம்னு சொன்னாரு

தொடர்ந்து தனக்கு தெரியாத விஷயங்களை சொல்லிகிட்டே போன இளம் அரசன் , உங்கள மாதிரி அனுப்பவும் அறிவும் எனக்கு எப்படி கிடைக்கும்னு கேட்டான்

அதுக்கு அந்த வேட்டைக்காரன் சொன்னாரு எல்லாமே பயிற்சி மூலமாவும் ,தொறந்து கற்பது மூலமாவும் கிடைக்கும் ,அரச பதவி கிடைச்சதும் நீ கல்வி பயிலாவத நிறுத்திட்டேன்னு நினைக்குறேனு சொன்னாரு ,அந்த வேட்டைக்காரர் சொல்லுறது எவ்வளவு உண்மைன்னு புரிஞ்சிகிட்டான்

அப்பத்தான் அவனை தேடி அவனோட பரிவாரங்கள் அங்க வந்துச்சு ,இளம் அரசர் கூட வந்த படை தளபதிகள் இளம் அரசர் கூட இருந்த வேட்டை காரனை அடையாளம் கண்டுபிடிச்சி அவருக்கு மரியாதையை செஞ்சாங்க

குழப்பமான இளம் அரசர் அந்த வேட்டை காரர் கிட்ட நீங்க யார் ,ஏன் என்னோட பரிவாரங்கள் உங்களுக்கு மரியாதை செய்யுறாங்கனு கேட்டான் ,அதுக்கு அந்த வேட்டைக்காரன் சொன்னாரு நீ எந்த பக்கத்து நாட்டு அரசன் மாதிரி ஆகணும்னு நினச்சியோ அந்த அரசன் நான்தான்னு சொன்னாரு

அதிர்ச்சியான இளம் அரசன் அவரோட கால்ல விழுந்து ஆசி வாங்குனான் ,அப்பத்தான் அந்த பேரரசர் சொன்னாரு ,நான் சொன்ன விஷயங்களை மட்டும் கத்துக்கிட்டா என்ன மாதிரி ஆகா முடியாது ,இது மாதிரி நிறய சாஸ்திரங்கள் இருக்கு அதையும் நீ தொடர்ந்து தெரிஞ்சிக்கிடனும்

அதுக்கு அனுபவம் வாய்ந்த அறிஞர்கள உன்னோட கூட வச்சிக்கோ ,அவுங்கள துணையை இளம் வயது சுறுசுறுப்பான இளைஞர்களையும் கூட வச்சுக்கோன்னு சொன்னாரு

காட்டுக்கு வேட்டையாட வந்து தன்னோட மிக பெரிய உத்வேகம் கொடுத்த பேரரசரை பார்த்து நிறய தெரிஞ்சிகிட்ட அந்த இளம் அரசன் தொடர்ந்து கல்வி கற்று ,தொடர்ந்து பயிற்சி செஞ்சு மிக பெரிய பேரரசன் ஆனார்