The Lion King- Story in Tamil :- சிங்க அரசன் தமிழ் கதை , முன்னொரு காலத்துல ஒரு மிக பெரிய காடு இருந்துச்சு ,அங்க முபாசான்ற சிங்க அரசருக்கும் ராணி சராபிக்கும் சிம்பாங்குற குட்டி சிங்கம் பிறந்துச்சு,காட்டுல இருக்குற எல்லா மிருகங்களும் சிம்பாவ பாக்க வந்தாங்க ,தங்களோட வருங்கால அரசரை பாத்து எல்லோரும் சந்தோசமா மரியாதை செஞ்சாங்க
சிங்க குடும்பத்தோட ஆஸ்தான குருவான ராபிக்கின்ற குரங்கு சிம்பாவுக்கு பேரவச்சு ஆசிர்வாதம் செஞ்சது.அதுக்கு அப்புறமா சாசு ன்ற குருவி தன்னோட மரியாதைய செஞ்சுச்சு. முபாசா அரசரோட தம்பியான ஸ்கார் தன்னோட அண்ணனுக்கு குழந்தை பிறந்ததால் அடுத்து தன்னால ஆட்சிக்கு வரமுடியாதுங்குற துயரத்துல இருந்துச்சு
அங்க போன சாசுவும் முபாசாவும் ஸ்கார் சிங்கத்தோட திமிர் தனத்த தட்டி கேட்டாங்க சொல்பேச்சு கேக்காத ஸ்கார் ரொம்ப கவலையோட இருந்துச்சு
ஒருநாள் சிம்பாவும் அதோட தோழியும் கட்ட சுத்திப்பாக்க போனாங்க அப்ப அங்க வந்த ஸ்கார் அங்க இருக்குற இருட்டு பக்கம் போகாதீங்க நீங்க சின்ன பிள்ளைகள்னு சொல்லுச்சு, அது என்ன இடம்னு அவளோட கேட்ட சிம்பா தன்னோட தோழியோட அந்த இடத்துக்கு போச்சு
அங்க மிகப்பெரிய இருட்டு குகை இருந்துச்சு அந்த குகைக்குள்ள போன சிம்பாவ அங்க இருந்த கழுதை புலிகள் தாக்க ஆரம்பிச்சது ,பயந்து போன சிம்பா தன்னோட உயிர காப்பாத்த ஓடுச்சு ,அப்ப அங்க வந்த சாசுவும் முபாசாவும் அந்த கழுத புலிகள விரட்டிட்டு சிம்பாவ காப்பாத்துச்சு ,
தன்னோட அப்பாவோட பேச்ச கேக்காம தனியா வந்து மாட்டிக்கிட்ட சிம்பா ரொம்ப வறுத்த பட்டுச்சு ,அத பாத்த முபாசா தன்னோட மகனுக்கு அறிவுரை சொல்லுச்சு.
அங்க வந்த ஸ்கார் தன்னோட அண்ணன கொல்லணும்னு அந்த கழுத்த புலிகளோடு சேந்து திட்டம் தீட்டுச்சு,அந்த திட்டத்தின்படி ஒருநாள் சிம்பாவ காட்டு பகுதியில இருந்த பள்ளத்தாக்குக்கு அனுப்பிச்சுச்சு,அந்த காட்டுல இருந்த காட்டு மாடுகளை விரட்டி சிம்பாவுக்கு ஆபத்த உண்டு பண்ணுச்சுங்க அந்த கழுத புலிகள்,
சிம்பாவுக்கு ஆபத்துன்னு முபாசா கிட்ட சொன்ன ஸ்கார்,முபாசா கூட அந்த பள்ள தாக்குக்கு போச்சு,ஆபத்துல இருந்த சிம்பாவ காப்பாத்துன முபாசா திடீர்னு ஒரு பள்ளத்துல விழ பாத்துச்சு ,அந்த சந்தர்ப்பத்த எதிர்பாத்த ஸ்கார் முபாசாவ தள்ளிவிட்டுடுச்சு.தன்னோட அப்பாவோட சாவுக்கு தன்னோட செயல்தான் காரணம்னு நினச்சு வறுத்த பட்ட சிம்பாவ நீ எங்கயாவுது ஓடிப்போயிடுன்னு சொல்லி அனுப்புச்சிச்சு ஸ்கார் ,சோகத்தோட இருந்த சிம்பாவ அங்க இருந்த கழுதபுலிகள் தொரத்த ஆரம்பிச்சுங்க,அப்ப அங்க வந்த டிமோன்ர கீரியும் பூம்பாங்கிற காட்டு பண்ணியும் காப்பாத்துச்சுங்க
தன்னோட இடத்துக்கு போக பிடிக்காத சிம்பா தன்னோட புது நண்பர்களோட இடத்துக்கு போச்சு,அங்கேயே வளர ஆரம்பிச்சுச்சு சிம்பா.சிம்பா காணாம போனதும் , அந்த சிங்க கூட்டத்தோட தலைவனா ஸ்கார் தன்ன தானே அறிவிச்சுகிடுச்சு.காட்டு விலங்குகளை அதிகமா வேட்டையடிச்சுங்க அந்த கழுத புலிகள் ,தனக்கு உதவி செஞ்ச அந்த கழுதபுலிக ஒன்னும் சொல்லாம விட்டுச்சு ஸ்கார்.
சிம்பாவோட தோழியான நாலா யாராவது உதவிக்கு வருவங்களான்னு தேடி போச்சு,அப்படி ரொம்ப தூரம் நடந்த நாளா ஒரு இடத்துல பூம்பாவ பாத்துச்சு ,தன்னோட பசிக்கு இந்த பண்ணிய அடிச்சு சாப்பிடணும்னு அதுமேல பாய போச்சு அப்ப அங்க வந்த சிம்பா தன்னோட தோழிய பாத்து ,தன்னோட காட்டுல நடக்குற தவறுகள தெரிஞ்சுக்கிடுச்சு,ஆனா அங்க போகுறதுக்கு மறுத்துடுச்சு சிம்பா
அப்பத்தான் அங்க வந்த ஆஸ்தான குருவான ராபி உங்க அப்பா சாகவே இல்லைனு சொல்லுச்சு ,அதிசத்து போன சிம்பாவ கூட்டிட்டு போயி தண்ணில தெரியிற பிம்பத்த காட்டுச்சு ,தன்னோட அப்பாவோட வாக்குறுதிகளை தெரிச்சுக்கிட்ட சிம்பா தன்னோட இடத்துக்கு வந்துச்சு
அங்க ஆதிக்கம் செலுத்திகிட்டு இருந்த ஸ்கார் முபாசாவோட மரணத்துக்கு சிம்பா தான் காரணம்னு குற்றம் சாட்டுச்சு,தன்னோட அண்ணன தன்னால காப்பாத்த முடியாலனும் சொல்லுச்சு,இந்த குற்றத்த ஏத்துக்கிட்ட சிம்பா தன்னோட அஜாக்கிரதயால தான் தன்னோட அப்பா செத்தாரு அதனால தான் தன்னோட வீட்டுக்கு வராம இத்தனை நாள் இருந்தேன்னு சொல்லுச்சு
அப்ப கால் தவறி பள்ளதுல விழப்போச்சு சிம்பா ,அப்படியே உங்க அப்பா சாக போறத பாத்த மாதிரியே இருக்குன்னு சொல்லுச்சு ஸ்கார்,நீ தான் அந்த பள்ளதாக்கும் சரியான நேரத்துக்கு போக முடியலன்னு சொன்னியே இப்ப எப்படி முபாசா கீழ விழுகிறத பாத்ததா சொல்றான்னு கேட்டுச்சு சராபி
தன்னோட குட்டு வெளிப்பட்டத தெரிஞ்சுகிட்ட ஸ்கார் தன்னோட கழுத புலிகளோடு சேந்து தாக்க ஆரம்பிச்சுது,உடனே அங்க வந்த நாளாவும் மத்த சிங்கங்களும் சிம்பாவுக்கு ஆதரவா சண்ட போட்டு எல்லாரையும் விரட்டுச்சுங்க,அப்ப தன்னோட கழுதபுலிகளோட சவகாசத்தால த்தான் இப்படி நடந்துக்கிட்டேன்னு சொல்லுச்சு ஸ்கார் ,இத கேட்ட அந்த கழுத புலிகள் எங்கள நீ தப்பா சொல்றியானு சொல்லி ஸ்கார்சிங்கத்த கடிச்சு கொன்னுடுச்சுங்க
தங்களோட புது அரசனான சிம்பாவோட சேந்து எல்லா சிங்கங்களும் தங்களோட காட்ட மறுபடியும் கழுத புலிகள் வராம தடுத்து,நல்ல படியா வாழ ஆரம்பிச்சுசுங்க