The Lion and The Rabbit Story | The Hare And The Lion Story:- ஒரு காட்டுல சிங்கராஜா வாழ்ந்துகிட்டு இருந்துச்சு
அதுக்கு தினமும் நிறைய மிருகங்களை வேட்டையாடுற பழக்கம் இருந்துச்சு, தன்னோட பசி தீந்த பின்னாடியும் அது தினமும் வேட்டையாடுச்சு
இத பாத்த மத்த மிருகங்கள் எல்லாம் ஒன்னு சேந்து ஒரு முடிவு பண்ணுச்சுங்க, அதன்படி சிங்க ராஜாவ பாத்து ஒரு வேண்டுதல் வச்சுகிடுச்சுங்க
சிங்க ராஜா நாங்க இனிமே தினமும் ஒரு மிருகம் உங்களுக்கு படையலா அனுப்பிவைக்கிறோம் , நீங்க மேற்கொன்டு எந்த மிருகத்தையும் வேட்டையாட கூடாதுன்னு வேண்டுதல் வச்சுதுங்க
கஷ்டப்பட்டு இனி வேட்டையாட தேவ இல்லைனு சிங்கராஜா ரொம்ப சந்தோச பட்டுச்சு
அன்னைக்கு இருந்து தினமும் ஒரு மிருகம் அந்த சிங்கராஜாவுக்கு உணவா போச்சுங்க
ஒரு நாள் முயலுக்கு உணவா போகுற வரிசை வந்துச்சு
புத்திசாலியான முயலுக்கு அந்த சிங்கத்துக்கு உணவா போறதுல விருப்பம் இல்ல , எப்படியாவது அந்த சிங்கத்து கிட்ட இருந்து தப்பிக்க முடிவு பண்ணுச்சு
வழியில ஒரு கிணத்த பாத்துச்சு அது பக்கத்துல படுத்து தூங்கிட்டு, கொஞ்ச நேரம் கழிச்சு சிங்கத்துக்கிட்ட போச்சு
ரொம்ப பசியோடவும் கோபத்தோடயும் இருந்த சிங்கம் என் எவ்வளவு நேரம்னு கேட்டுச்சு
நான் ரொம்ப சின்னதா இருந்ததால இன்னும் ரெண்டு முயலையும் உங்களுக்கு அனுப்புச்சாங்க ஆனா அந்த கிணத்துல இருக்குற சிங்கம்
என் முயல் நண்பர்களை தின்னுடுச்சு அப்படின்னு சொல்லுச்சு
இத கேட்ட சிங்கத்துக்கு கோபம் வந்துச்சு எனக்கு அந்த சிங்கத்த காமின்னு சொல்லுச்சு
கிணத்த காமிச்சா அந்த முயல் ஐயா சிங்கராஜா உள்ளதான் அந்த பெரிய சிங்கம் இருக்கு எட்டி பாருங்கன்னு சொல்லுச்சு
உள்ள எட்டி பாத்த சிங்கத்துக்கு அதோட உருவமே தெரிச்சுச்சு
அதப்பாத்து கோபமான சிங்கம் உடனே உள்ள குதிச்சது
அவசர பட்டு உள்ள குதிச்சிட்டமேன்னு ரொம்ப வறுத்த பட்டுச்சு அந்த சிங்கம்
முயலோட புத்திசாலி தனத்த எல்லா மிருகமும் பாராட்டுச்சுக்கு ,சிங்கத்தோட தொல்ல இனி இல்லைனு எல்லா மிருகமும் ரொம்ப சந்தோசப்பட்டுச்சுங்க