The Limit Of Power – இரண்டு மாதங்கள் – Akbar Birbal Story:- அக்பர் ஒருநாள் தனிமையில எதோ சிந்திச்சிக்கிட்டு இருந்தாரு
அப்ப அங்க வந்தாரு பீர்பால் ,அப்ப அக்பர் கேட்டாரு நாம ஏன் ரெண்டு மாசத்த ஒன்னு சேர்க்க கூடாது ,வருசத்துக்கு 6மாசம் இருக்க கூடாதாணு கேட்டாரு
உடனே பீர்பால் சொன்னார் ,ஆஹா ரொம்ப அருமையான யோசனை அரசே ,ஆனா ஒருமாசத்துக்கு ரெண்டு தடவ முடிவெட்டணுமேனு கேட்டாரு
அக்பர் ஒரு மாதிரி பார்த்தாரு ,பீர்பால் சொன்னாரு ஆமா அரசே நான் ஒரு மாசத்துக்கு ஒருதடவ பௌர்ணமிக்கு மறுநாள் முடி வெட்டுவேன் ,நீங்க ரெண்ட ஒன்னாகிட்டீங்கன்னா ரெண்டு தடவ பௌர்ணமி வருமே
அப்படியே அந்த சந்திர சூரியரையும் கூப்பிட்டு ரெண்டு மாசத்துக்கு ஒருக்க இடம் மாறுனா போதும்னு சொல்லிடுங்கனு சொன்னாரு பீர்பால்
இத கேட்ட அக்பருக்கு கோபத்துக்கு பதிலா சிரிப்புதான் வந்துச்சு ,தன்னோட அதிகாரத்தோட எல்லை எதுவரைனு பீர்பால் சுலபமா புரியவச்சதுனால அவருக்கும் நன்றி சொன்னாரு