The Kind Peacock – மயிலின் கருணை – Kids Moral Stories”-ஒரு காட்டுல ஒரு மயில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அந்த மயில் ரொம்ப அழகா இருந்துச்சு ,அதே நேரத்துல மத்த பறவைகள் மேலயும் ரொம்ப கருணையோட இருந்துச்சு
ஆனா மயிலாட அழக பார்த்த மத்த பறவைகள் ,இந்த மயில்கள் எல்லாம் எப்பவும் திமிரோடதான் இருக்கும்னு அதுகளே முடிவு செஞ்சுக்கிடுச்சுங்க
அதனால் மயில் கூட சேராம தனியாவே இருந்துச்சுங்க,மயில் நட்போட பேச வந்தா கூட மயில் தவிர்த்துட்டு வேற பக்கம் போய்டுங்க அந்த பறவைகள்
ஒருநாள் குளிர்காலம் அந்த காட்டுல ஆரம்பிச்சுச்சு ,அப்பதான் புதுசா குஞ்சு பொருச்சிருந்த ஒரு குருவி ரொம்ப குளிர்ல கஷ்டப்பட்டுச்சு
தன்னோட குளிரையும் தன்னோட குஞ்சுகளோட குளிரையும் எப்படி போக்கிக்கிடறதுனு தெரியாம ரொம்ப கஷ்டப்பட்டுச்சு அந்த குருவி
அப்பத்தான் அங்க வந்துச்சு அந்த அழகான மயில் ,குளிர்ல கஷ்டப்படுற குருவியயும் அதோட குஞ்சுகளையும் பார்த்த மயில் ரொம்ப வருத்தப்பட்டுச்சு
உடனே தன்னோட தொகையில இருந்து சில இறகுகளை பிச்சு குளிருக்கு இதமா ,குருவுக்கும் குருவியோட குஞ்சுகளுக்கு போத்தி விட்டுச்சு மயில்
மயிலாட தோகை நல்லபடியா குருவி குஞ்சுகளை குளிர்ல இருந்து காப்பாத்துச்சு ,அத பார்த்த எல்லா குருவிகளும் இவ்வளவு நல்ல மயில அதோட தோற்றத்த மட்டும் வச்சு இத்தனை நாள் தப்பா நினச்சுட்டமேனு ரொம்ப வருத்தப்பட்டுச்சுங்க
அன்னையில இருந்து குருவிகளும்,பறவைகளும் மயில்களும் ஒற்றுமையா அந்த காட்டுல வாழ்ந்தாங்க
நீதி : ஒருத்தரோட தோற்றத்த வச்சு ஒருத்தர் நல்லவருனு எப்படி நம்ப கூடாதோ அதே மாதிரி ஒருத்தரோட தோற்றத்த வச்சு அவரு கெட்டவருணும் முடிவு செய்ய கூடாது