The Jackal and the War Drum – குள்ளநரியும் போர் முரசும்:- ஒரு காட்டுல ஒரு குள்ளநரி இருந்துச்சு , அது ரொம்ப சோம்பேறித்தனமா இருந்துச்சு
அது எப்பவும் மத்த குள்ளநரி வேட்டையாடுற மிருகங்கள இது புடிங்கி தின்னுடும்
அதனால கோபமான மத்த குள்ளநரி எல்லாம் சேந்து நாம ரெண்டு குழுவா பிரிஞ்சிக்குவோம் ஒரு குழு வேட்டையாடட்டும் அடுத்த குழு அந்த சோம்பேறி குள்ளநரிய தொரத்தட்டும் , அப்படினு முடிவு பண்ணிச்சுங்க
அதனால தனக்கு உணவு கிடைக்காம போனதுனால , உணவு தேடி அலைஞ்சது அந்த சோம்பேறி குள்ளநரி
ஒரு பழைய போர் தளவாடம் இருக்குற இடத்துக்கு வந்த அந்த நரிக்கு எதோ சத்தம் கேட்டுச்சு
உடனே பயந்து போன குள்ளநரி உடனே வேகமா ஓடுச்சு
திடீர்னு அதுக்கு ஒரு எண்ணம் உருவாச்சு நாம இனி ஓடக்கூடாது தைரியமா அது என்ன சத்தம்னு பாக்கணும்னு முடிவு பண்ணுச்சு
சத்தம் வந்த இடத்துக்கு வந்த குள்ளநரி அதோ ஒரு போர் முரசுன்னு தெரிஞ்சிகிடுச்சு , காத்துல அந்த உறுமல் சத்தம் கேட்டதுன்னும் புரிஞ்சிகிடுச்சு
அதுக்கு பக்கத்துலயே உணவு கிடைக்கும் இருக்குறத பாத்தது , அந்த உணவு தன்னோட வாழ்நாள் முழுவதும் போதுமானதா இருக்கும்னு தோணுச்சு அதுக்கு
பயந்து போயி போயிருந்தம்னா நமக்கு இந்த உணவு கிடைக்காம போயிருக்குமேன்னு அந்த குள்ளநரிக்கு அப்பத்தான் தோணுச்சு