The Horse and the Missing Hay – வைக்கோலும் குதிரையும்

The Horse and the Missing Hay – வைக்கோலும் குதிரையும்:-ஒரு கிராமத்துல நிறைய விவசாயிங்க வாழ்ந்திகிட்டு வந்தாங்க

அதுல ஒரு விவசாயி ஒரு குதிரை வளர்த்தாரு ,அந்த குதிரைக்கு எவ்வளவு சாப்பாடு போட்டாலும் குதிரைக்கு திருப்தியே இல்ல

அதனால் பக்கத்து தோட்டத்துக்கு போயி அங்க இருந்த வைக்கோல் எல்லாத்தையும் திருடி திங்க ஆரம்பிச்சுச்சு

தன்னோட தோட்டத்துல இருக்குற வைக்கோல் எல்லாத்தையும் யார் திருடுறான்னு யோசிச்சாறு

அதனால ராத்திரி மறைஞ்சிருந்து குதிர வைக்கோல் திருடுறத பார்த்தாரு

அடடா இந்த குதிரைக்கு பசி ரொம்ப இருக்கும்போலனு அத அவரு சாதாரணமா எடுத்திக்கிட்டாரு ,ஏன்னா அவரு வளர்த்த குதிரையை அவரு வித்துட்டதுனால அந்த வைக்கோல் வீணாதான் இருந்துச்சு

இருந்தாலும் குதிர கிட்ட வந்து நீதான் வைக்கோல் திருடி திங்கிரியா பரவால்ல ,ஆனா விவசாய நிலத்துல இருக்குற சோள செடிகள தின்னுடாத அது ரொம்ப ருசியா இருக்கும்னு சொல்லிட்டு போய்ட்டாரு

அந்த திருட்டு குதிரைக்கு அப்பத்தான் தோணுச்சு அடடா இந்த வைக்கோல திருடுறதுக்கு பதிலா இந்த சோள செடிகளை திருடி தின்னா எப்படி இருக்கும்னு நினச்சுச்சு

உடனே அதோட நாக்குல எச்சி ஊருச்சு ,உடனே அங்க இருந்த நிலத்துக்கு போயி எல்லா சோள செடிகளையும் திங்க ஆரம்பிச்சுச்சு

இத ஒளிஞ்சிருந்து பார்த்த விவசாயி சிரிச்சிகிட்டே தன்னோட மனைவிகிட்ட சொன்னாரு ,இங்கபாரு அந்த திருட்டு குதிரைய ,நம்ம விவசாயம் செஞ்சு அறுவடை செஞ்சுட்டு மிச்சம் இருக்குற செடிகளை தீ வச்சு அளிக்கணும்னு நினச்சமே அந்த செடிகளை தின்னுகிட்டு இருக்கு

இந்த குதிரியோட திருட்டு புத்தி தெரிஞ்சுதான் அத திங்காதனு சொன்னேன்,இப்ப பாரு தீ வச்சி மிச்ச செடிகளை அளிக்கிற வேலையும் பணமும் மிச்சம்னு சொன்னாரு

இது எதுவுமே தெரியாம தான் பெரிய புத்திசாலின்னு நினைச்ச குதிரை அந்த சோளத்த தின்னு முடிச்சுச்சு ,விவசாயிக்கு ரொம்ப சந்தோசமா போச்சு ,