The Horse and The Donkey Story – போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் :- குழந்தைகளை இணைக்கு நாம “போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம்” அப்படிங்கிற பழமொழியை பத்தி ஒரு குட்டி கத பாப்போம்
போகவிட்டு புறஞ்சொல்லித் திரிய வேண்டாம் அப்படின்னா ஒருத்தர் இல்லாத பொது அவரை பத்தி மத்தவங்கட்ட இல்லாததையும் பொல்லாததையும் சொல்லுறது
ஒரு ஊருல ஒரு வியாபாரி இருந்தாரு,அவரு ஒரு குதிரையும் கழுதையும் வச்சிருந்தார்.
பொதி சுமக்குறதுக்கு கழுதையும், பயணம் செய்றதுக்கு குதிரையும் வச்சிருந்தார்
அந்த குதிரை எப்பப்பாரு கழுதையை பத்தி கொள் சொல்லிகிட்டே இருக்கும்
முதலாளி அங்க பாருங்க கழுதை சாஞ்சு சாஞ்சு நடக்குது பொருட்களை சிந்த போகுதுன்னு சொல்லும் உடனே முதலாளி அந்த கழுதையை அடிப்பாரு இத பாத்து குதிரை சந்தோசப்படும்,.
ஒரு நாள் அந்த கழுதை மேல அதிகமான பொதி மூட்டைகளை ஏத்துனாரு அந்த வியாபாரி
பாரம் தாங்காத அந்த கழுத மெதுவா நடக்க அறமிச்சது
இதப்பாத்த அந்த வியாபாரியும் குதிரைல இருந்து இறங்கி கழுத கூடவே நடக்க ஆரம்பிச்சாரு
அப்ப அந்த குதிரை சொல்லுச்சு முதலாளி ஆறு வரப்போகுது இந்த கழுத தண்ணில உக்காந்துச்சுன்னா உங்க பொருள் எல்லாம் வீனா போகிடும்னு சொல்லுச்சு
அதே நேரத்துல பாரம் தாங்காம அந்த கழுதையும் மெதுவா கீழ உக்காந்து.
உடனே அந்த வியாபாரி மெதுவா பாரத்தை இறக்கி வச்சாரு,இத பாத்த குதிரை சிரிச்சுச்சு அடடா இன்னைக்கு கழுதைக்கு அடி நிச்சயம்னு நினைச்சது
அப்பத்தான் கழுத சொல்லுச்சு முதலாளி நீங்க எதோ முக்கியமான பொருள் கொண்டுபோற மாதிரி தெரியுது,
ஆத்துல தண்ணி வேற அதிகமா போகுது அதனால உயரமான குதிரை மேல இந்த மூட்டையை ஏத்துங்கனு சொல்லுச்சு
அடடா அதுவும் சரிதான்னு குதிரைமேல் மூட்டையை ஏத்துனாரு அந்த வியாபாரி.
எந்த ஆபத்தும் இல்லாம ஆத்த கடந்த குதிரையை பாத்த முதலாளி இனிமே முக்கியமான மூட்டைகளை நீதான் சுமக்கனும்னு சொன்னாரு
இத கேட்ட குதிரை, வாய வச்சுக்கிட்டு சும்மா இல்லாம அடுத்தவர் விசயத்துல தலையிட்டதுக்கு நமக்கு நல்ல தண்டனை கிடைச்சுதுன்னு நினைச்சு வறுத்த பட்டுச்சு