The Hair Dye – கருப்பு மை – Akbar Birbal Stories:-அக்பர் தன்னோட தலைமுடி நரைச்சு போறத பார்த்து ரொம்ப வருத்தப்பட்டாரு
அதனால சிகை கலைஞரை வச்சு வாரா வாரம் கருப்பு மை பூச ஆரம்பிச்சாரு ,
இத பார்த்த பீர்பாலுக்கு இது புடிக்கல
ஒருநாள் அக்பர் மை பூசிட்டு கரு கரு முடியோட வந்துட்டு இருந்தாரு ,அடடா என்ன அரசே உங்க தலை காகத்தை போல கருமையா இருக்குனு சொன்னாரு
உடனே அக்பர் பீர்பால் தன்னை கிண்டல் செய்யிறத தெரிஞ்சிக்கிட்டாரு
இருந்தாலும் அமைதியா இருந்தாரு
பீர்பால் மேலும் சொன்னாரு உங்க முன்னம் தலைல கூட காக்கா தன் வேலைய கட்டிடுச்சு போலன்னு சொன்னாரு
இத கேட்ட அக்பருக்கு ஒண்ணும் புரியல ஒரு கண்ணாடிய எடுத்து பாத்தாரு ,அப்பத்தான் அவருக்கு புரிஞ்சது அவர் நெத்தியிலயும் கொஞ்சம் கருப்பு மை ஓட்டிடுச்சுனு
பீர்பால் சொன்னாரு அரசே வயதாக வயதாக இயற்கை மாற்றங்கள் நம்ம உடம்புல நடக்கத்தான் செய்யும் ,அத நாம தடுக்க முடியாத போது
அத நாம ஏத்துக்கிடனும்னு சொன்னாரு ,அன்னைல இருந்து அக்பர் தலைக்கு மை போடுறத நிறுத்திட்டாரு