The Greedy Mouse Story in Tamil- பேராசை எலி குட்டி கதை :- ஒரு வயலுக்கு பக்கத்துல ஒரு எலி வாழ்த்துகிட்டு வந்துச்சு ,அதுக்கு அங்க இருக்குற சோளங்களை சாப்பிடுறதுதான் வேலையே
எலி அதிகமா சோளத்த சாப்புடறதால அந்த விவசாயிக்கு ரொம்ப கவலை வந்தது அதனால் சோளத்தை எல்லாத்தையும் ஒரு மூடிபோட்ட கூடைல போட்டு வைக்க ஆரம்பிச்சாங்க
ஒருநாள் அந்த எலி அந்த கூடையை ஓட்ட போட்டு உள்ள போயி சோளத்த சாப்பிட ஆரம்பிச்சது, நிறைய சோளத்த சாப்பிட்டதால எலியோட வயிறு பெருசாயிடுச்சு
அந்த எலியால வெளிய வர முடியல உடனே அந்த எலி அழுக ஆரம்பிச்சது
அந்த அழுகையை கேட்ட அந்த பக்கமா போன முயல் அந்த எலியப்பாத்து ஏன் அழுகுறேன்னு கேட்டுச்சு
எலி நடந்தத சொல்லுச்சு ,அத கேட்ட முயல் சிரிச்சது நீ கொஞ்ச நேரம் காத்திருந்தன்னா சோளம் எல்லாம் செரிச்சு உன் வயிறு சின்னதா ஆயிரும் நீ சுலபமா வெளிய வந்துடலாம் அப்படினு சொல்லுச்சு
உடனே வயிறு குறையுற வரைக்கும் கூடைக்குள்ளயே தூங்குச்சு
தூங்க எழுந்ததும் வயிறு சின்னதா ஆகிடுச்சு
அப்பத்தான் எலிக்கு தோணுச்சு நாம இப்ப வெளிய போகலாம் ஆனா இந்த சோளத்தை விட்டு போக மனசே இல்ல
இன்னும் நிறைய சோளத்தை தின்னுட்டு கொறட்ட விட்டு தூங்குச்சு அந்த எலி
அந்த கொறட்ட சத்தத்த கேட்டு அங்க வந்த எலி மெதுவா அந்த கூடையை திறந்து அந்த எலிய பிடிச்சு தின்னுடுச்சு
பழமொழி: ஒன்றே செய் , நன்றே செய் , இன்றே செய்