The Greatest Of All – யார் உயர்ந்தவர்- Akbar Birbal Stories In Tamil:-ஒருநாள் அக்பர் அரசவையில ஒரு கேள்வி கேட்டாரு ,இந்த உலகத்துல யாரு உயர்ந்தவர் அப்டிங்கிறதுதான் அந்த கேள்வி

உடனே அங்க இருந்த மந்திரிங்க எல்லாரும் அரசர் அக்பர்தான் இந்த உலகத்துலயே உயர்ந்தவர்னு சொன்னாங்க

ஆனா பீர்பால் மட்டும் ஒண்ணுமே சொல்லாம இருந்தாரு ,இத பார்த்த அக்பர் இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்க பீர்பலுனு கேட்டாரு அக்பர்
உடனே பீர்பால் சொன்னாரு ஒரு குழந்தை தான் அரசே உலகத்துலயே ரொம்ப உயர்ந்தது அப்படினு சொன்னாரு

அத நிரூபிக்க முடியுமான்னு கேட்டாங்க மத்த அமைச்சர்கள் எல்லாரும்
உடனே பீர்பால் அரண்மனைக்கு போயி அக்பரோட பேரன கூட்டிட்டு வந்தாரு பீர்பால்

உடனே அக்பர் அந்த குட்டி பையன தூக்கி மடியில வச்சிக்கிட்டாரு

அந்த பையன் சின்ன சின்ன சேட்டைகள் பண்ண ஆரம்பிச்சான் ,அக்பரோட தாடிய பிடிச்சி இழுக்கிறது ,மேல் சட்டைய நோண்டுறதுனு சேட்ட பண்ண ஆரம்பிச்சான்
இப்ப பாத்திங்களா உலகமகா சக்கரவர்தியான அக்பர் தடியவே ஒருத்தன் இழுக்குறான்னா அவன் எவ்வளவு பெரிய தைரிய சாலியா இருப்பான்னு பாருங்கன்னு சொன்னாரு
உடனே எல்லாரும் சிரிச்சிகிட்டு உலகத்துல குழந்தைகள் தான் மிக பெரியவங்கனு சொன்னாங்க
