The Golden Lion Kids Moral Story In Tamil – தங்க சிங்கம் :- ஒரு ஊருல ஒரு இளவரசி இருந்தா

அவ ரொம்ப தைரியமானவளாவும் நல்லவளாவும் இருந்தா அதனால எல்லாருக்கும் அவள ரொம்ப பிடிக்கும்

ஒருநாள் அவள பாக்க ஒரு குட்டி பொண்ணு வந்தா,அவ இளவரசி கிட்ட சொன்னா நான் தங்க சிங்கத்த பத்தி நிறய கதை கேட்டிருக்கேன்னு

அந்த பொண்ணு தொடர்ந்து சொன்னா நான் அந்த தங்க சிங்கத்த பார்க்க போறேன் என்கூட உதவிக்கு வாங்கனு கூப்பிட்டா இளவரசிய

இத கேட்ட இளவரசிக்கு ரொம்ப ஆர்வம் வந்துடுச்சு ,உடனே இளவரசியும் அந்த குட்டி பொண்ணுகூட சேர்ந்து அந்த தங்க சிங்கத்த தேடி நடக்க ஆரம்பிச்சா

அப்ப காட்டு மிருகங்கள் எல்லாம் கேட்டுச்சுங்க ,அப்படி அந்த தங்க சிங்கத்த பார்க்க போனா என்ன கேப்பீங்கனு கேட்டுச்சுங்க

அதுக்கு அந்த இளவரசி சொன்னா இது வரைக்கும் அந்த தங்க சிங்கத்தை யாருமே பார்த்தது இல்லைனு சொல்றாங்கா ,நாங்க அந்த தங்க சிங்கத்த கண்டுபிடிச்சா ,அதுவே பெரிய சாதனை அதனால நாங்க அதுகிட்ட எதுவுமே கேக்க மாட்டோம்னு சொன்னா

இளவரசி சொன்ன பதில் அந்த மிருகங்களுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு ,அதனால அந்த சிங்கம் இருக்குற குகைக்கு போற வழிய படம் வரைஞ்சு காமிச்சுச்சு ஒரு நரி

அந்த வரைபடத்தை பார்த்து சுலபமா தங்க சிங்கம் இருக்குற இடத்துக்கு போனாங்க இளவரசியும் குட்டி பொன்னும்

அப்ப அந்த தங்க சிங்கம் கேட்டுச்சு ,எனக்கு ஒரு உதவி செய்யுங்க நான் ரொம்பநாள் வாழணும்ன்னா எனக்கு மலைமேல இருக்குற ரோஜாவும் ,கடலுக்கு அடியில இருக்குற முத்தும் ,மரகத புறாவோடை இறங்கும் வேணும்னு கேட்டுச்சு

ஏன் எதுக்குன்னு கேக்காத இளவரசி அந்த மூணையும் கொண்டுவர போனா,

கடலுக்குள்ள இருக்குற முத்த இளவரசி நீச்சல் அடிச்சு எடுத்துட்டு வந்தா

மரகத புறாவோடை இரக ரெண்டுபேரும் சேர்ந்து எடுத்தாங்க

அடுத்ததா அந்த மலை ரோஜா ரொம்ப உயரத்துல இருந்துச்சு ,ஆனா அந்த குட்டி பொண்ணு ரொம்ப தைரியத்தோடு மேல ஏறி பிடுங்குனா

மூணு பொருட்களையும் அந்த தங்க சிங்கத்துக்கிட்ட கொண்டுவந்து கொடுத்தாங்க

அப்பத்தான் அந்த தங்க சிங்கம் கேட்டுச்சு உங்களுக்கு நான் எதாவது கொடுக்கணும் என்ன வேணும்னு கேட்டுச்சு

அதுக்கு அந்த குட்டி பொண்ணும் இளவரசியும் எதுவும் எங்களுக்கு வேண்டாம்னு சொன்னாங்க

தன்கிட்ட வர்ற எல்லாரும் எதாவது வரம் கேட்டே வருவாங்க ஆனா நீங்க ரெண்டுபேரும் எதுவுமே வேணாம்னு சொல்லிடீங்க

இந்த நல்ல குணம் இருக்குற வரைக்கும் உங்களுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் ,தொடர்ந்து நல்ல பிள்ளைகளா இருங்கனு சொல்லி வாழ்த்தி அனுப்பிதுச்சு அந்த தங்க சிங்கம்
