The Exeptional Ruby – மாணிக்கத்தின் அளவு -Akbar Birbal Kathai :- அக்பரோட நாட்டுல ஒரு திருடன் வாழ்ந்துகிட்டு வந்தான் அவன் ரொம்ப திறமைசாலி
நேரடியா திருடாம பணக்காரங்ககிட்ட பொய் புரட்டு பண்ணி நண்பனா சேர்ந்து அவுங்களுக்கே தெரியாம அவுங்க பொருள திருடுறது அவனோட வழக்கம்
இத அவனோட அண்ணன் ஒருநாள் கண்டுபிடிச்சுட்டாரு
உடனே அந்த திருடனுக்கு பயம் வந்திடுச்சு ,அண்ணன் அக்பர் கிட்ட சொன்னா தனக்கு சவுக்கடியும் ,சிறை தண்டனையும் கிடைக்கும்னு பயந்தான்
அதனால ஒரு திட்டம் போட்டு ,தன்னோட விலையுயர்ந்த மாணிக்க கல்ல தன்னோட அண்ணன் திருடிட்டாருனு அக்பர் அரசவையில புகார் சொன்னான்
இத கேட்ட அக்பர் அதுக்கு சாட்சி இருக்கானு கேட்டாரு,உடனே இருக்காங்க அரசேனு சொல்லிட்டு பணம் கொடுத்து நாலு பேர கூட்டிட்டு வந்தான்
அவுங்கள பார்த்ததும் அக்பருக்கு ரொம்ப சந்தேகமா இருந்துச்சு ,அதனால பீர்பால விட்டு அவுங்கள விசாரிக்க சொன்னாரு
பீர்பால் அவுங்க நாலு பேரையும் தனித்தனியா சந்திச்சு அந்த திருடு போன மணிகம் எவ்வளவு பெருசுனு கேட்டாரு
அதுல ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி சொன்னாரு ,ஒரு தோல் செருப்பு அளவு பெருசுனு சொன்னாரு
அடுத்து இருந்த தையல் கலைஞர் ஊசி அளவு சின்னதுனு சொன்னாரு
மர ஆசாரி சொன்னாரு அந்த மாணிக்கம் சுத்தியல் அளவு பெருசுனு சொன்னாரு ,அடுத்து வந்த வெள்ளம் வியாபாரி ஒரு மண்ட வெள்ளம் அளவு இருக்குனு சொன்னாரு
இத கேட்ட பீர்பாலுக்கு இது எல்லாமே பொய்னு தெரிஞ்சுபோச்சு ,பொய்ச்சாட்சி சொன்ன எல்லாருக்கும் பத்து பத்து சவுக்கடி கொடுத்தாரு
அந்த உண்மையான திருடனோட திருட்டு வழக்கத்தை குற்றம் சாட்டப்பட்ட அவரோட அண்ணன் மூலமா தெரிஞ்சிக்கிட்டு அவனுக்கு சிறை தண்டனை கொடுத்தாரு பீர்பால்