The Donkey In The Lion Skin-அடி வாங்கிய கழுதை :- ஒரு ஊருல ஒரு சோம்பேறி கழுத இருந்துச்சு,அந்த கழுத எந்த வேலையும் செய்யாம சும்மாவே திரிஞ்சிக்கிட்டு இருந்துச்சு

ஒருநாள் அந்த கழுத காட்டு வழியா நடந்து போய்கிட்டு இருந்துச்சு ,அப்ப ஒரு சிங்கம் படுத்திருக்குறத பாத்துச்சு ,பயந்துபோன கழுத அசையாம நின்னுச்சு ,கொஞ்ச நேரம் ஆகியும் சிங்கம் எழுந்திரிக்காதத பாத்து யோசிக்க ஆரம்பிச்சுச்சு

கிட்ட போய் பாத்தப்ப தான் தெரிஞ்சது அது இறந்துபோன சிங்கத்தோட தோல்னு,உடனே அந்த தோல எடுத்து தன்மேல போட்டுக்கிச்சு ,

அப்படியே நடந்து போன கழுத நதி நீர்ல தன்னோட பிம்பத்த பாத்துச்சு ,அடடா நாம பாக்குறதுக்கு சிங்கம் மாதிரியே இருக்கோமேன்னு நினைச்சது

இத வச்சு ஏதாவது பண்ணனும்னு நினச்ச அந்த கழுத மெதுவா நடந்து ,பக்கத்துல இருக்குற கிராமத்துக்கு போச்சு

திடீர்னு ஊருக்குள்ள சிங்கம் வந்தத பாத்த எல்லாரும் பயந்து போனாங்க,எல்லாரும் பயந்து அங்கேயும் இங்கயும் ஓடுனாங்க

இத பாத்த கழுதைக்கு ஒரே சந்தோசம் அங்க இருந்த கத்திரிக்கா கூடைய அப்படியே தூக்கிகிட்டு காட்டுக்குள்ள ஓடுச்சு

அங்க இருந்த மரத்தடியில் உக்காந்து எல்லா கத்திரிக்கையையும் சாப்டுச்சு,நமக்க கடவுள் அருளால இந்த சிங்க தோல் கிடைச்சிருக்கு இத்தவச்சு இனி வேல செய்யாமலேயே சாப்பிடலாம்னு நினைச்சது

மறுநாளும் அந்த கிராமத்துக்கு போச்சு கழுத ,எல்லாரும் பயந்து ஓடுனதும் அந்த இருந்த தானிய கூடைய தூக்கிக்கிட்டு காட்டுக்கு வந்துச்சு

நல்லா தின்னுட்டு தூங்குச்சு கழுத ,மறுநாள் அந்த கிராமத்துக்கு வந்த கழுத அங்க இருந்தவங்க மறைஞ்சிருந்து பாத்தாங்க ,

இது என்ன மாமிச பட்சியான சிங்கம் ,காய் கனி கூடைய தூக்கிட்டு போகுதுன்னு சந்தேக பட்டாங்க

உடனே மெது மறைஞ்சு மறைஞ்சு அந்த சிங்கத்து பின்னாடி போனாங்க ,கழுத ரொம்ப சந்தோசமா இருந்ததாள பாட்டு பாடிகிட்டே போச்சு

கழுதையோட சத்தத்த கேட்ட கிராமத்து ஆளுங்களுக்கு அப்பத்தான் உண்மை புரிஞ்சது ,உடனே ஒரு பெரிய குச்சியை எடுத்துட்டு வந்து அந்த கழுதையை அடி அடி னு அடிச்சு காட்டுப்பாக்கம் தொரத்திவிட்டுடாங்க
