The Donkey and the Dog – கழுதையும் நாயும்

The Donkey and the Dog – கழுதையும் நாயும்:-ஒரு ஊருல ஒரு விவசாயி வாழ்ந்துகிட்டு வந்தாரு ,அவரு தோட்டத்துல ஒரு நாயும் கழுதையும் இருந்துச்சுச்சு

அந்த விவசாயி விவசாயம் செய்ய துணைக்கு கழுதையும் ,விவசாய நிலத்தை பாதுகாக்க நாயும் வளர்த்துக்கிட்டு வந்தாரு

ஒருநாள் விவசாய நிலத்து பக்கம் எதோ சத்தம் கேட்டுச்சு ,உடனே அங்க ஓடிப்போன நாய் அங்க காட்டு பன்னிங்க பயிர்களை தின்கிறத பார்த்துச்சு

உடனே சத்தமா குறைக்க ஆரம்பிச்சுச்சு அந்த நாய் உடனே தூக்கத்துல இருந்து எழுந்திரிச்ச விவசாயி பெரிய கம்ப எடுத்து அந்த காட்டுபன்னிங்கள தொரத்தி விட்டுட்டாரு

தன்னோட பயிர்கள காப்பாத்துன நாய்க்கு அன்னைல இருந்து நிறைய சோறு போட்டாரு அந்த விவசாயி

இத பார்த்த கழுதைக்கு தானும் நாய் போல காவல் வேலை செஞ்சா நிறய சோறு கிடைக்கும்னு நினச்சுச்சு

அதனால தோட்டத்துல சின்ன அசைவு ,சத்தம் கேட்டா கூட சத்தம் போட்டு கனைக்க ஆரம்பிச்சுச்சு

அதனால தூக்க முடியாம போன விவசாயி ,கழுதையோட இந்த திடீர் செயலுக்கு என்ன காரணம்னு தன்னோட தாத்தாகிட்ட போயி நடந்தத சொன்னாரு

புத்திசாலியான அந்த தாத்தா ஒரே வீட்டுல ரெண்டு குழந்தைகள் இருந்தா எப்படி பாரபட்சம் காட்டாம வளக்குறமோ அதுமாதிரி

நன்மை செஞ்சாலும் செய்யலைனாலும் கழுதையயும் ,நாயையும் ஒரேமாதிரி நடந்து ,ரெண்டுக்கும் ஒரேமாதிரி உணவு கொடுன்னு சொன்னாரு

அப்பதான் அந்த விவசாயிக்கு உண்மை புரிஞ்சது ,அன்னைல இருந்து நாய் காவல் காக்குற வேலை மட்டும் செஞ்சுச்சு ,கழுதை பொதி சுமக்கிற விவசாய வேலை மட்டும் செஞ்சு சந்தோசமா இருந்துச்சுங்க