The Disguised Thief and the Soldier’s Trick – திருட்டு சாமியார் வேஷம் :- ஒரு பெரிய கிராமத்துல ஒரு திருடன் இருந்தான் ,அவன் எப்பவும் சின்ன சின்ன திருட்டுகள செஞ்சுட்டு சுத்திகிட்டு இருப்பான்
எந்த வேலைக்கும் போகாம சோம்பேறியா இருந்த அவனுக்கு திருடுறது மூலமா கிடைக்குற பணத்துல சாப்பிட்டு சந்தோசமா வாழ்ந்துகிட்டு வந்தான்
அப்படி இருக்கிறப்ப ஒருநாள் ஒரு அரசர் அந்த பகுதியில நடக்குற திருட்டு பத்தி கேள்விப்பட்டு ஒரு புத்திசாலியான தளபதிய அந்த பகுதிக்கு காவலா போட்டாரு
புதுசா தளபதி அந்த பகுதிக்கு வந்ததும் எல்லா பக்கமும் படை வீரர்கல காவலுக்கு போட்டாரு ,அதனால திருடனுக்கு பெரிய தொந்தரவா போச்சு ,இதுநாள் வர எந்த தொந்தரவும் இல்லாம திருட்டு வேலை செஞ்சுகிட்டு சுகமா வாழ்ந்த அவனால திருட முடியல
அதனால என்ன செய்யிறதுனு நினச்சா அவன் ஒரேடியா நிறைய பொன்னும் பொருளும் திருடிகிட்டு இந்த ஊர விட்டு வெளியேற முடிவு செஞ்சான்
அதனால பக்கத்துல இருந்த கோவிலுக்குள்ள சாமியார் மாதிரி தாடி மீசை எல்லாம் ஒட்டிக்கிட்டு போயி நிறைய நகைகளையும் பாத்திரங்களையும் திருடன அந்த திருடன் ராத்திரியோட ராத்திரியா அந்த ஊர விட்டே ஓடி போய்ட்டான்
ரொம்ப தூரம் ஓடி வந்த அந்த திருடன் ஒரு சின்ன கிராமத்த வந்து அடைஞ்சான் ,அங்க இருந்த ஒரு பெரிய ஆலமரத்துல திருடிட்டு வந்த பொருளை எல்லாம் மறச்சி வச்சான் , ரொம்ப தூரம் ஓடி வந்ததால ரொம்ப சோர்ந்து போயிருந்த அவன் ,அந்த ஆலமரத்தடியிலயே படுத்து தூங்கிட்டான்
மறுனாள் காலையில தாடி மீசையோட அவன பார்த்த அந்த கிராமத்து மக்கள் அவனை பெரிய சாமியாருனு நினைச்சுட்டாங்க ,அதனால அவன்கிட்ட வந்து ஆசிர்வாதம் வாங்குனாங்க , அவனுக்கு அப்பத்தான் புரிஞ்சது அடடா இது நல்ல யோசனையா இருக்கே
இந்த ஊருல ஒளிஞ்சுக்கிட்டு திருடிட்டு வந்த பொருளை எல்லாம் கொஞ்சம் கொஞ்சமா வித்து சாப்பிட்டுட்டுட்டு இருக்கலாம்னு முடிவு செஞ்சான் அந்த திருடன்,அன்னையில இருந்து அவனை நிறைய பக்தர்கள் தேடி வந்தாங்க
வந்தவங்க எல்லாரும் அவனுக்கு சுவையான உணவும் பரிசு பொருட்களும் கொண்டுவந்து கொடுத்தாங்க ,ரொம்ப சந்தோஷமான அந்த திருடன் அங்கேயே தன்னோட வாழ்க்கையை தொடங்குனான் ,கொஞ்ச கொஞ்சமா தனக்கு கிடைச்ச பரிசு பொருட்களை வித்து அந்த மரத்த ஒட்டி ஒரு குடிசையும் கட்டிக்கிட்டு வாழ்க்கையை தொடர்ந்தான்
ஆனா திருடனை பிடிக்க வந்த தளபதி கோவில்ல திருட்டு நடந்ததுக்கு அப்புறமா நிறைய திருட்டு நடக்காதத கவனிச்சாறு ,புத்திசாலியான அவரு அப்ப இங்க இருந்த திருடன் வேற ஊருக்கு போய்ட்டானு முடிவு செஞ்சாரு ,அப்பத்தான் ஒற்றர்கள் மூலமா பக்கத்து கிராமத்துல ஒரு புது சாமியார் வந்திருக்குறதையும் ,அவரு கிட்ட ஆசிர்வாதம் வாங்க நிறய கூட்டம் கூடுறதையும் தெரிஞ்சிக்கிட்டாரு
உடனே தன்னோட காவலாளிகள் சிலபேர் பயணிகள் மாதிரி உடை அணிய வச்சி அந்த சாமியார மாறு வேடத்துல போயி பார்த்தாரு,இந்த சாமியார் எப்ப இந்த ஊருக்கு வந்தாருனு விசாரிச்ச தளபதிக்கு கோவில்ல திருடுபோன நாளோட அது சரியா பொருந்துனதும் நிறய கேள்விகளுக்கு விடை கிடைச்சது
இந்த சாமியாரை நாம திருடனு சொல்லி சோதனை போட்டா தங்களோட நம்பிக்கைய கொலைகிறதா நினச்சு கிராமத்து காரங்க நம்மகிட்ட சண்டைக்கு வருவாங்க அப்புறம் இந்த சாமியார விசாரிக்கவே முடியாதுனு அவருக்கு மனசுல பட்டுச்சு ,அதனால ஒரு பெரிய தந்திர திட்டத்த போட்டாரு தளபதி
ஒருநாள் ஆசிர்வாதம் வாங்குற மாதிரி சாமியார்கிட்ட போன தளபதி ,அடடா இந்த சாமியாரா இவுருகிட்ட நான் ஏற்கனவே ஆசிர்வாதம் வாங்கியிருக்கேன் , என்னோட திருடுபோன உலக்கையை மீட்டு கொடுக்க சொல்லி வேண்டுனென் உடனே வீட்டுக்குள்ள போயி மந்திரம் போட்டு என்னோட உலக்கையை வர வச்சு கொடுத்தாருனு எல்லா பக்தர்கள் முன்னாடியும் சொன்னாரு
உடனே கூட்டத்துல இருந்த பக்தர்களுக்கு ஆச்சர்யமா போச்சு ,அப்பத்தான் மாறுவேடத்துல இருந்த இன்னொரு காவலாளி ஐயா இங்க கிராமத்துல இருந்த கோவில்ல சாமியோட கிரீடம் காணாம போச்சு அத வர வச்சி கொடுங்கன்னு சொன்னாரு அந்த காவலாளி
இத கேட்ட கூட்டத்துல இருந்த பக்தர்கள் எல்லாம் அடடா நம்ம கண்ணு முன்னாடியே சாமியோட சக்திய பார்க்க போறோம்னு ஒரே ஆவலா ஆகிட்டாங்க .
ஆனா திருடனுக்கு தூக்கி வாரி போட்டுச்சு ,அடடா இது என்ன சோதனை இப்ப இவுங்களுக்கு அந்த கிரீடத்தை வர வச்சி கொடுத்தாகணும் ,இல்லைனா தனக்கு சக்தி இல்லை தான் போலின்னு சொல்லி அடிச்சி தொரதீருவங்க ,அதனால தான் திருடிட்டு வந்த கிரேடமும் நகைகளும் ஒளிச்சி வச்சிருந்த இடத்துல இருந்து எடுத்து கொடுத்து எல்லார் கிட்டயும் நல்லபேர் வாங்கிடலாம்னு நினைச்சான்
உடனே குடிசைக்குள்ள போன அந்த போலி சாமியார் கொஞ்ச நேரத்துக்கு அப்புறமா காணாம போன கிரீடத்தோட வெளிய வந்தான் ,அத பார்த்த எல்லா பக்தர்களும் ஒரே பரவசமா போச்சு ,எல்லாரும் இந்த சாமியாரோட சக்திய பார்த்தீங்களானு சொல்லி அவரை புகழ்ந்தாங்க
அந்த கிரீடத்தை வாங்கி பார்த்த காவலாளி அது காணாம போன கீரிடம் தாணு உறுதி படுத்திகிட்டு , சாமியார் கிட்ட வந்தாரு வந்தவரு அவரோட தாடிய பிடிச்சி இலுத்தாரு தாடி கையோட வந்திடுச்சு ,அப்பத்தான் எல்லாருக்கும் புரிஞ்சது அடடா இவரு உண்மையாவே சாமியார் இல்ல போலின்னு
தன்னோட வேஷம் வெளிப்பட்டதால் ஓடிப்போக பார்த்தான் திருடன் ஆனா மாறு வேசத்துல வந்திருந்த மத்த காவல்காரங்க அவன மடக்கி பிடிச்சு தளபதி கிட்ட இழுத்துகிட்டு போனாங்க ,அப்பத்தான் தன்னோட வேஷத்தை கலைச்சாறு தளபதி ,என்ன நடக்குதுன்னு ஆவலோட பார்த்துகிட்டு இருந்த கிராமத்து காரங்க கிட்ட ,யாரு என்னனு விசாரிக்காம யார் வந்தாலும் சாமியாரா ஏத்துக்கிடுற உங்க அறியாமைய நினச்சு எனக்கு வருத்தமா இருக்குனு சொன்னாரு
அத கேட்ட எல்லாரும் வெட்கி தலை குனிஞ்சாங்க