The Crows And The Snake Story in Tamil – காகமும் பொல்லாத பாம்பும் :- ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய மரம் இருந்துச்சு ,அந்த மரத்துல ஒரு அப்பா காக்கவும் அம்மா காக்கவும் வாழ்ந்துகிட்டு வந்துச்சு
அதுங்க அப்பத்தான் மூணு குட்டி காக்கா குஞ்சுகள பொறிச்சி இருந்துச்சுங்க ,ஒரு நாள் அந்த ரெண்டு காக்கவும் உணவு தேடி வெளியில போச்சுங்க
அப்ப அந்த மரத்துக்கு அடியில வசிச்ச ஒரு பாம்பு அங்க வந்துச்சு,அந்த காக்கா குஞ்சுகள தின்ன அந்த பொல்லாத பாம்பு திரும்ப அந்த மரத்துக்கு அடியில போய்டுச்சு
கூட்டுக்கு திரும்பி வந்த அந்த அப்பா அம்மா காக்கா ரெண்டும் ரொம்ப வறுத்த பட்டுச்சு ,அப்பத்தான் அந்த அம்மா பாம்பு மரத்துக்கு அடியில பாம்பு இருக்குறத பார்த்துச்சு
அடடா இந்த பாம்புதான் நம்ம காக்கா குஞ்சுகள சாப்பிடுதான்னு நினச்சு ரொம்ப வருத்தப்பட்டுச்சு அந்த அம்மா காகம்
கொஞ்ச நாளுக்கு அப்புறமா நிறைய முட்ட போட்டுச்சு அது,
இப்பவும் அந்த பொல்லாத பாம்பு காக்கா கூட்டுக்கு வந்து முட்டையை முழுங்கிடுச்சு
ரொம்ப வருத்தப்பட்ட காக்கா ரெண்டும் பக்கத்துல வசிக்கிற ஒரு புத்திசாலி நரிகிட்ட போய் தங்களை காப்பாத்த சொல்லுச்சுங்க
புத்திசாலியான அந்த நரி ஒரு யோசனை சொல்லுச்சு
உடனே வேகமா பறந்துபோன நரி பக்கத்து அரண்மனை பக்கம் போச்சுங்க ,
அங்க குளிச்சிகிட்டு இருந்த ராணியோட நகைகள் இருக்குறத பார்த்துச்சுங்க
அங்க இருக்குற காவல் காரங்க பாக்குற மாதிரி அந்த நகையை தூக்கிட்டு பறந்துச்சு அந்த அம்மா காக்கா
அப்ப அந்த அப்பா காக்கா சத்தம் போட்டுச்சு ,உடனே எல்லா காவல் காரர்களும் அதுங்கள தொரத்த ஆரம்பிச்சாங்க
நகையோட பறந்த அம்மா காகம் சரியா அந்த பொல்லாத பாம்பு வசிக்கிற மர பொந்துக்குள்ளே அந்த நகைய போட்டுச்சு
உடனே ஓடி வந்த காவலர்கள் அந்த நகையை எடுக்க பார்த்தாங்க ,அப்பத்தான் வெளிய வந்துச்சு அந்த பொல்லாத பாம்பு
துணிச்சலான அந்த வீரர்கள் ஒரு பெரிய கத்திய எடுத்து அந்த பாம்ப வெட்டி கொன்னுட்டாங்க
இத்தனை நாள் தங்களோட காக்கா குஞ்சுகளையும் ,காக்கா முட்டையையும் தின்ன பொல்லாத பாம்புக்கு சரியான தண்டனை கிடைச்சத பார்த்த காக்கைகளுக்கு ரொம்ப சந்தோசம்
உடனே தங்களுக்கு நல்ல யோசனை சொன்ன நரியாருக்கு ரொம்ப நன்றி சொல்லுச்சுங்க அதுங்க
அதுக்கு அப்புறமா நிறய முட்டைகள் இட்டு அது காக்கா குஞ்சா வெளிய வந்ததும் ரொம்ப சந்தோசப்பட்டுச்சுங்க அந்த அம்மா அப்பா காக்காய்கள்