The Crow and the Farmer’s Field – வயலில் காகம்

The Crow and the Farmer’s Field – வயலில் காகம்:-ஒரு கிராமத்துல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு ஒரு பெரிய விவசாய நிலம் இருந்துச்சு

அதுல அவரு நிறய பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயாரா இருந்துச்சு ,அந்த கிராமத்துல இருக்குற காகங்கள் அங்க வந்து நிறய தானியங்கள திங்க ஆரம்பிச்சுங்க

அத பார்த்த விவசாயிக்கு ரொம்ப கோபம் வந்துடுச்சு ,அங்க இருந்த காக்காக்கள விரட்ட ஆரம்பிச்சாரு

ஆனா நிறய காக்கா இருந்ததால அவரால எல்லாத்தையும் விரட்ட முடியல

மறுநாள் சந்தைக்கு போன அந்த விவசாயி உரக்கடையில போயி காக்காக்களுக்கு விஷம் வாங்கிட்டு வந்து நிலத்துல போட்டாரு

அத சாப்பிட்ட காக்கைகள் நிறய அங்கேயே செத்து போச்சு ,அதே நேரத்தில நிலத்துல போட்ட விஷம் அந்த மண்ணுல கலந்துடுச்சு

அதுக்கு அப்புறமா அந்த மண்ணுல சரியாவே விவசாயம் செய்ய முடியல ,

அப்பத்தான் அந்த விவசாயிக்கு புரிஞ்சுச்சு காக்கா சாப்பிட்ட தானியங்கள விட இப்ப வந்திருக்குற நஷ்டம் மிக பெருசுனு

ஆனா காலம் கடந்து வந்த நல்ல புத்தி யாருக்கும் பிரயோஜனம் இல்லைங்கிறத புரிச்சிக்கிட்ட விவசாயி ரொம்ப வருத்தப்பட்டாரு

Leave a comment