சேவலுக்கு கிடைத்த வைரம் – THE COCK AND THE PEARL Kids Story In Tamil :- ஒரு பண்ணை வீட்டுல ஒரு சேவல் வாழ்ந்துகிட்டு வந்துச்சு.

ஒருநாள் உணவு கொத்தி தின்னுகிட்டு இருந்த அந்த சேவல் ஒரு வைரத்த கண்டு பிடிச்சிச்சு

அது என்னனு தெரியாமயே அந்த வைரத்தோட அழகுல மயங்குச்சு அந்த சேவல் , அத எல்லா கோழி சேவல்களுக்கு காமிச்சு பெருமிதம் பட்டுகிட்டு இருந்துச்சு அந்த சேவல்

உடனே அந்த கூட்டத்தோட வயசான சேவல் அங்க வந்துச்சு
இது மனிதகர்களோட செல்வம் இது ஒருத்தர்கிட்ட இருந்துச்சுன்னா அவுங்களுக்கு பெருமையா இருக்கும் ஆனா அது திரும்ப போறப்ப ரொம்ப கவலையா இருக்கும்
தினமும் கிடைக்கிற உணவ வச்சு சந்தோசமா இருக்குற நமக்கு இந்த வைரம் திருப்திய தராது ,இத மனிதர்கள் கண்ணுல படுறமாதிரி தூக்கி எறிங்கன்னு சொல்லுச்சு

அப்பத்தான் அந்த பண்ணையோட முதலாளி வீட்டுல ஒரே கூச்சலும் குழப்பமுமா இருந்துச்சு , அங்க போயி பாத்தப்ப முதலாளியோட மனைவி தன்னோட வைரம் காணாம போச்சுன்னு சொல்லி அழுதுகிட்டு இருந்தாங்க
இத பாத்த அந்த சேவலுக்கு தன்னோட வயதான சேவல் சொன்னது உண்மைன்னு தோணுச்சு ,அது சொன்ன மாதிரியே நடைபாதைல அந்த வைரத்த போட்டுச்சு

அந்த வைரத்த தேடி வந்த முதலாளி ரொம்ப சந்தோச பட்டாரு ,இப்படித்தானா நாமளும் சந்தோச பட்டோம் ஆனா அவரோட மனைவி பட்ட துன்பமும் அழுகையும் நமக்கு வேணாம்னு தனக்குள்ள சொல்லிக்கிட்டு திரும்பி உணவு தேட போச்சு அந்த சேவல்