The Clever Bull – புத்திசாலி காளை மாடு – Kulanthaigal Siruvarmalar Stories:-ஒரு காட்டு பகுதியில ஒரு காளை மாடு நடந்து போய்கிட்டு இருந்துச்சு,ரொம்ப அடர்ந்த காட்டுப்பகுதியில ஒரு குகைய பாத்துச்சு ,அதுக்கு பக்கத்துலயே ஒரு குளமும் ,குளத்தை சுத்தி நிறைய புல்லும் இருந்துச்சு.இத பாத்த காளைமாடு நாம வாழறதுக்கு இதுதான் சரியான இடம்னு நினைச்சது

உடனே அந்த குகைய தன்னோட வீடாக்கிகிட்டு அங்கேயே வாழ ஆரம்பிச்சது ,அந்த காட்டு விலங்குகள் காளைகிட்ட சொல்லுச்சுங்க இது ஒரு சிங்கம் வாழ்ந்த குகை அந்த சிங்கம் எப்பவாவது இந்த பக்கம் வரும்னு சொல்லுச்சுங்க

தன்னோட பலத்து மேலயும் புத்திசாலிதனது மேலயும் அதீத நம்பிக்கை வச்சிருந்த அந்த காளை ,எப்படிப்பட்ட நிலைமை வந்தாலும் சமாளிச்சுக்கிடலாம்னு நினைச்சது.

கொஞ்ச நாள் கழிச்சு ஒருநாள் குகைக்கு வெளியில ஓய்வெடுத்துகிட்டு இருந்துச்சு காளைமாடு ,அப்ப அந்த சிங்கம் திரும்பி வந்துச்சு , அத பாத்த காளைக்கு ஒருநிமிடம் பயம் வந்துடுச்சு ,அடடா இந்த சிங்கத்துக்கிட்ட இருந்து எப்படி தப்பிக்கிறதுனு யோசிச்சுச்சு,உடனே திரும்பி குகைய பாத்து நண்பர்களே அந்த சிங்கம் வந்துடுச்சு உடனே சமையலுக்கு ரெடி ஆகுங்கனு சொல்லுச்சு

இத கேட்ட சிங்கத்துக்கு திடீர்னு பயம் வந்துடுச்சு ,இங்க நிறைய காளை மாடுகள் இருக்கு போல,இந்த இருந்தா நம்மள அடிச்சி சமைசிடுவாங்கனு பயந்து அடுத்த காட்டுக்கு ஓட ஆரம்பிச்சது

போற வழியில ஒரு நரிய பாத்துச்சு , சிங்க ராஜா அவர்களே ஏன் இப்படி பதறி அடிச்சு ஓடுறீங்கன்னு கேட்டுச்சு ,அதுக்கு அந்த சிங்க ராஜா சொல்லுச்சு ,என்னோட குகைள நிறைய காளை மாடுகள் தங்கி இருக்குங்க ,என்ன பாத்ததும் கொல்லுறதுக்கு தயாராகுச்சுங்க நான் தப்பிச்சு ஓடிக்கிட்டு இருக்கேனு சொல்லுச்சு
இத கேட்ட புத்திசாலியான நரி கேட்டுச்சு ,அது எப்படி உங்க குகைள நிறய காளைமாடுகள் இருக்க முடியும் அதுதான் சின்ன இடமாச்சே ,நானே ஒரு தடவ அந்த பக்கம் ஒரே ஒரு காளைய மட்டும்தான் பாத்திருக்கேன்
எதுக்கும் என்கூட வாங்க நாம போய் என்ன நடக்குதுன்னு தெரிஞ்சுக்கிட்டு வருவோம்னு சொல்லுச்சு ,இத கேட்ட சிங்கத்துக்கு பயம் தெளியவே இல்ல

வேண்டாம் நரியாரே நான் வரலைன்னு சொல்லுச்சு,இத கேட்ட நரி சொல்லுச்சு பயப்படாதீங்க சிங்கராஜாவே வேணும்னா என்னோட வாலையும் உங்களோட வாலையும் ஒண்ணா கட்டிக்குவோம் ,அப்பவாவது நம்புங்க நான் உங்க கூடவே இருப்பென்கிறத அப்படினு சொல்லுச்சு.

இதுக்கு அந்த சிங்கமும் சம்மதிச்சது உடனே ரெண்டு மிருகங்களும் தங்களோட வால் ரெண்டையும் பக்கத்துல இருந்த கொடிய பயன்படுத்தி கட்டிக்கிட்டு குகை பக்கம் போச்சுங்க
சிங்கமும் நரியும் திரும்பி வர்றத பாத்துச்சு காளை, அப்ப சிங்கத்தோட காதுக்கு கேக்குற அளவுக்கு சத்தமா ” நண்பர்களே நம்ம நரியார் சிங்கத்த பிடிச்சி தன்னோட வால்ல கட்டி இழுத்துகிட்டு வர்ரார்னு” சொல்லுச்சு ,இத கேட்ட சிங்கத்துக்கு இன்னமும் பயமாகிடுச்சு ,அடடா தந்திரகார நரியே என்ன பிடிச்சி இங்க கொண்டுவந்துருக்கியா அப்படினு கேட்டுச்சு ,

அப்ப நரி சொல்லுச்சு அவசரப்படாதீங்க அந்த காளைமாடு தந்திரம் பண்ணுதுனு சொல்லுச்சு ,அப்ப திரும்ப காளைமாடு நரிய பாத்து கேட்டுச்சு
நரியாரே நரியாரே ரெண்டு சிங்கம் கொண்டு வர்றேன்னு சொல்லிட்டு ,இப்ப ஒரே ஒரு சிங்கத்தோட வர்றீங்களேனு கேட்டுச்சு ,இத கேட்ட சிங்கம் நரியை இழுத்துகிட்டு ஒரே ஓட்டமா ஓட ஆரம்பிச்சது
அதோட வால்ல கட்டி இருந்த நரியும் சிங்கத்தோட சேர்ந்து இழுத்துகிட்டு போச்சு ,பாறை,முள்னு நரி அடிபட்டு நரி செத்தே போச்சு