The Cat & the Old Rat- பூனையும் எலிகளும் :- ஒரு கிராமத்து பண்ணை வீட்டுல விளை பொருட்களை சேமிக்கிட்ட இடம் இருந்துச்சு

அதுல நிறய எலிகள் வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க , அந்த எலிகளோட தொல்லை தங்க முடியாம அந்த இடத்தோட எஜமானர் ஒரு பெரிய பூனைய வாங்கிட்டு வந்து அங்க விட்டாரு

அந்த பூன எவ்வளவு முயற்சி செஞ்சும் அந்த எலிகள பிடிக்க முடியல ,எவ்வளவு வேகமா ஓடினாலும் அந்த எலிகள் தங்களோட வலைக்குள்ள போயி ஒளிஞ்சுக்கிடுச்சுங்க

ஒருநாள் ஒரு கட்ட மேல இருந்து தலைகீழா தொங்கி விளையாடிகிட்டு இருந்துச்சு பூன ,அத பார்த்த சில எலிகள் பூன செத்துபோச்சுனு நினச்சுச்சுங்க
உடனே பூன செத்துடுச்சு நமக்கு விடுதலைனு சொல்லி கத்துச்சுங்க எல்லா எலிகளும் ,இத கேட்ட பூன உண்மையாவே செத்தது போல நடிச்சிச்சு

ஆனா புத்திசாலியான ஒரு வயசான எலி மட்டும் பூனைய நம்பாதிங்கனு சொல்லுச்சு ,அத கேக்காம எல்லா எலிகளும் கூச்சல் போட்டுக்கிட்டு எலி வலையில இருந்து வெளிய வந்துச்சுங்க
உடனே துரிதமா செயல் பட்ட பூன ஒரு பெரிய கட்டாய எடுத்து எலி வலய அடச்சுச்சு
அவசரப்பட்டு வலைல இருந்து வெளிய வந்த எலிகளால தங்களோட பாதுகாப்பான இடமான வளைக்குள்ள போக முடியல
அதனால அந்த பூனைக்கு ஒவ்வொரு எலிகளா பலியாகி போச்சுங்க
நீதி : வயதில் மூத்தவர் சொற்படி நடக்க வேண்டும்