The Bundle Of Sticks Story – ஒற்றுமையே பலமாம் குழந்தைகள் கதை :- ஒரு ஊருல ஒரு விவசாயி இருந்தாரு ,அவருக்கு மூணு மகன்கள் இருந்தாங்க

அவுங்க மூணுபேரும் எப்பவும் சண்ட போட்டுக்கிட்டே இருப்பாங்க ,சண்ட போட்டுட்டு ஒருத்தரும் விவசாய வேலை செய்யாம நேரத்த வேஸ்ட் பண்ணிகிட்டே இருப்பாங்க

அதனால அந்த விவசாயிக்கு ரொம்ப கவலையா இருந்துச்சு, தன்னோட மகன்களை எப்படி திருத்தணும்னு யோசிச்சுகிட்டே இருந்த அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு

ஒருநாள் அந்த பயலுகள கூப்பிட்டாரு அந்த விவசாயி,நான் இன்னைக்கு ரெண்டு போட்டி வைக்க போறேன் ,ஜெயிக்கிறவங்களுக்கு என்னோட எல்லா சொத்தையும் கொடுப்பேன்னு சொன்னாரு

உடனே அந்த மூணு மகன்களுக்கும் மூணு கரும்பு கட்டுகள கொடுத்து ,இத எல்லாம் பிரிச்சி ஓடைங்க இதுதான் முதல் போட்டின்னு சொன்னாரு

உடனே அந்த மூணு மகன்களும் அந்த கட்ட பிரிச்சி ,ஒவ்வொரு கரும்பா எடுத்து ஈஸியா எல்லா கரும்பையும் ஒடச்சிட்டாங்க

இத பார்த்த அந்த விவசாயி சிரிச்சிகிட்டே , அதே மாதிரி திரும்பவும் மூணு கரும்பு கட்ட அவுங்ககிட்ட கொடுத்து ,இப்ப இந்த கட்ட பிரிக்காம எல்லா கரும்பையும் ஒரே நேரத்துல ஒடைக்கணும் இதுதான் ரெண்டாவது போட்டின்னு சொன்னாரு

ஆனா இந்த தடவ எவ்வளவு முயற்சி செஞ்சும் அவுங்களால அந்த முழு கரும்பு கட்ட உடைக்க முடியலை

அப்பத்தான் அந்த விவசாயி சொன்னாரு ,நீங்களும் இந்த கரும்புகள் போலத்தான் ,தனி தனியா இருந்தா உங்களை ஈஸியா ஒடைச்சுடுவாங்க

அதே நேரத்துல ஒற்றுமையை இருந்தீங்கன்னா உங்களை யாராலயும் எதுவும் செய்ய முடியாதுனு சொன்னாரு

இத கேட்ட அந்த மூணு பேருக்கும் அப்பத்தான் உண்மை புரிஞ்சுச்சு ,இத்தனை நாள் மூணு பேரும் தங்களுக்குள்ள சண்டை போட்டதை நினைச்சு ரொம்ப வருத்தப்பட்டாங்க

அன்னைல இருந்து அவுங்க மூணுபேரும் ஒண்ணாவே விவசாயம் செஞ்சாங்க ,நிறய உழைப்பை அவுங்க கொடுத்ததால கொஞ்ச நாள்லயே பணக்காரங்களா மாறிட்டாங்க அந்த அண்ணன் தம்பிகள் மூணு பேரும்