The Bridge of Unity – பாலம் யாருக்கு சொந்தம் -மரியாதை ராமன் கதைகள் :- ஒரு நாட்ட அண்டுகிட்டு வந்த ராஜா ரெண்டு கிராமங்களுக்கு நடுவுல ஓடுன ஆத்துக்கு நடுவுல ஒரு பாலத்தை கட்டுனாரு
ரெண்டு ஊர் மக்களும் அந்த பாலத்து வழியா சுலபமா பயணம் செய்வாங்கனு அவரு நினைச்சாரு
ஆனா அந்த ரெண்டு ஊர் மக்களும் பாலம் தங்களுக்குத்தான் சொந்தம்னு சண்டை போட ஆரம்பிச்சாங்க
ராஜாவே நேர்ல வந்து சமாதானம் சொல்லியும் அவுங்களுக்குள்ள சண்ட முடியவே இல்ல
அதனால அந்த நாட்டுல வாழ்ந்துகிட்டு வந்த மரியாதை ராமன கூட்டிட்டு வந்து இந்த பிரச்னையை தீர்த்து வைக்க சொன்னாரு
ரெண்டுபேர் விருப்பத்தையும் கேட்ட மரியாதை ராமன் கொஞ்ச நேரம் யோசிச்சிட்டு சொன்னாரு
நீங்க ரெண்டு பேரும் அந்த பாலத்தை உங்க ஊருக்கு சொந்தம் கொண்டாடுறீங்க ,அந்த பாலம் உங்களுக்கு சொந்தமா இருந்தா நீங்க நல்லா இருக்கலாம்னு நினைக்குறீங்க
இதுல எந்த ஊர் காரங்க அந்த பாலத்த வச்சிகிடுறீங்களோ அவுங்க , உங்க ஊருக்கு வர்றதுக்கு மட்டும் பாலத்தை பயன்படுத்துங்க ,அடுத்த ஊருக்கு போறதுக்கு பாலத்தை பயன்படுத்த கூடாதுனு சொல்லிட்டு போய்ட்டாரு
அப்பத்தான் எல்லாருக்கும் புரிஞ்சது நாம அந்த பாலத்தை பயன்படுத்தாம வெளியூருக்கு போக முடியாது ,வெளியூருல இருந்துதான் நம்ம ஊருக்கு திரும்பி வர முடியும்
அதனால அந்த பாலத்த சொந்தமாகிகிட்டா ஒரு பயனும் இல்லனு புரிஞ்சிகிட்டு சமாதானமா போனாங்க
மரியாதையை ராமன் தன்னோட புத்தி கூர்மையாள பிரச்சனைய தீர்த்து வச்சத நினச்சு ரொம்ப சந்தோச பட்டாரு ராஜா