பறவைகளும் முட்டாள் குரங்குகளும் -The Birds And The Monkeys Kids Tamil Moral Story :- ஒரு காட்டு பகுதியில ஒரு பெரிய மரம் இருந்துச்சு

அந்த மரத்துல நிறைய பறவைகள் கூடு கட்டி வாழ்ந்துகிட்டு வந்துச்சுங்க ,அந்த பறவைங்க எப்பவும் தங்களோட கூட பாதுகாப்பா வச்சிக்கிட்டே இருக்கும்

பிஞ்சிபோன கூட திரும்பி கட்டுறது , பழைய கூட்ட பாதுகாப்பான கிளைக்கு மாத்துறதுனு எப்பவும் சுறுசுறுப்பா இருக்கும்

ஒருநாள் மழைக்காலம் தொடங்குச்சு ,அன்னைக்கு காட்டுல பெரிய மழை பெய்ய ஆரம்பிச்சுச்சு
தங்களோட கூட்ட பாதுகாப்பா கட்டியிருந்த பறவைகள் எல்லாம் பாதுகாப்பா அதுக்குள்ள இருந்துச்சுங்க
அப்ப பக்கத்துல வாழ்ந்துகிட்டு வந்த குரங்குகள் கூட்டம் மழைக்கு அந்த மரத்தோட அடியில ஒதுங்குச்சுங்க

அப்பா புறா சொல்லுச்சு குரங்குகளே குரங்குகளே நீங்களும் எங்களை மாதிரி கூடு கட்டி வச்சிருந்தா இப்படி குளிர்ல நடுங்க அவசியம் வந்திருக்காதேன்னு கேட்டுச்சு

உடனே குருவி சொல்லுச்சு எங்களுக்கு உங்களை மாதிரி கைகள் இல்லை இருந்தாலும் பாதுகாப்பான கூடு கட்டியிருக்கோம்னு சொல்லுச்சு

இத கேட்ட குரங்கு ஒன்னு என்ன இந்த சின்ன பறவைகள் நம்மள கிண்டல் செய்யுதுங்கனு சொல்லுச்சு
உடனே இன்னொரு குரங்கு சொல்லுச்சு இரு மழை விட்டதும் நம்ம யாருனு,நம்ம பலம் என்னனு இந்த பறவைகளுக்கு கட்டுவோம்னு சொல்லுச்சு

மழை விட்டதும் எல்லா குரங்குகளும் மரத்துமேல ஏறி அங்க இருந்த கூட்ட எல்லாத்தையும் பிச்சி பிச்சி போட்டுடுச்சுங்க

கூடுகளை இழந்த பறவைகள் ரொம்ப வறுத்த பட்டுச்சுங்க ,அப்பத்தான் வயசான புறா ஒன்னு சொல்லுச்சு ,பறவைகளே நீங்க யாருக்கு யோசனை சொல்லணும்னு முதல்ல தெரிஞ்சிக்கிடனும்

எப்பவும் நம்ம யோசனையை கேட்டு புரிஞ்சிக்கிடறவாங்க கிட்டயும் , நாம சொல்ற யோசனை என்னனு தெரிஞ்சிக்கின்ற புத்திசாலிங்க கிட்டயும்தான் யோசனை சொல்லணும்னு சொல்லுச்சு

இப்ப பாருங்க நீங்க நல்லதுதான் சொல்லறீங்கன்னு புரிஞ்சிக்க முடியாத குரங்குகள் தங்களோட முட்டாள் தனத்தை நம்மகிட்ட காட்டிடுச்சுங்க ,அதனால இனிமே தேவை இல்லாம யோசனை சொல்றதுக்கு முன்னாடி யோசிங்கனு சொல்லுச்சு
இத கேட்ட பறவைகள் எல்லாம் தங்களோட தவறை நினச்சு வருத்தப்பட்டுச்சுங்க