ஆசிரியர் தின கட்டுரை – Teachers Day Essay For Kids :- மாணவர்களும் ஆசிரியர்களும் இணைந்து கொண்டாடும் மிக முக்கிய விழா ஆசிரியர் தின விழா ஆகும்.இந்த விழா மாணவர்கள் ஆசிரியர்களை பாராட்ட மற்றும் நன்றி சொல்ல கொண்டாடும் விழா ஆகும்.இந்த விழா ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி நடை பெறுகிறது.

முன்னாள் ஜனாதிபதி திரு சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்ததினம் செப்டம்பர் ஐந்து , அவர் தனது ஆசிரியர் தொழிலை திறம்பட செய்து குழந்தைகள் மீது அதீத பாசமும் கொண்டவராக இருந்ததாலும்.ஆசிரியராக பணியாற்றிய ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்ததினம் ஆசிரியர் தினமாக கொண்டாட படுகிறது.
மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இடையே இருக்கும் சிறு இடைவெளியை குறைக்க ,அவர்கள் இணைந்து ஒரு பண்டிகையை கொண்டாட வாய்ப்பாகவும் , ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களையும் நன்றியையும் பகிர்ந்து கொண்டு தங்கள் நட்புறவை வளர்த்துக்கொள்ள ஒரு வாய்ப்பாகவும் அமைகிறது இந்த ஆசிரியர் தினம்
ஆசிரியர்கள் தினம் பள்ளிகளில் மட்டுமல்லாது அனைத்து கல்லூரிகளிலும் , பல்கலைக்கழகங்களிலும் கொண்டாட படுகின்றன.இந்த தினத்தில் மாணவர்கள் தங்கள் ஆசிரியர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுத்தும் , வாழ்த்து அட்டைகள் கொடுத்தும்,இணையம் மற்றும் தொலைபேசி வாயிலாக வாழ்த்து செய்தியை பகிர்ந்தும் கொண்டாட படுகிறது இந்த ஆசிரியர் தினம்