Tamil story for kids with moral – அப்பாவும் மகனும்:- ஒரு அப்பாவும் மகனும் வீட்டு தோட்டத்துல வேல செஞ்சுகிட்டு இருந்தாங்க

அந்த மகனுக்கு சின்ன வயசு அதனால சின்ன சின்ன வேலைய மட்டும் செஞ்சுகிட்டு இருந்தான்
அவனுக்கு பக்கத்துல ஒரு கல் இருந்துச்சு
மகனே அந்த கல்ல வெளிய எடு அந்த இடத்துல ஒரு செடிய நாம நடலாம்னு சொன்னாரு
ஆவலான அந்த மகன் மெதுவா அந்த கல்ல எடுக்க முயற்சி செய்தான் முடியல
தன் கைல இருந்த குட்டி கடப்பாரைய எடுத்து கல்ல எடுக்க முயற்சி பண்ணுனால் அப்பயும் எடுக்க முடியல

அப்பா என்னால இந்த கல்ல என்னால எடுக்க முடியல அப்படின்னு சொன்னான்
உனக்கு இருக்குற எல்லாத்தையும் பயன்படுத்தி அந்த கல்ல எடு பாப்போம்னு சொன்னாரு
எவ்வளவு முயற்சி செஞ்சும் எடுக்க முடியாம அழுக ஆரம்பிச்சான்
அப்பஅங்க வந்த அப்பா சொன்னாரு உனக்கு இருக்குற எல்லா வழிகளையும் பயன் படுத்த சொன்னேன் , ஆனா நீ ஒண்ணா மறந்துட்ட உனக்கு உதவுறதுக்கு இருக்குற என்ன ஏன் நீ பயன்படுத்தலைன்னு சொன்னாரு
அப்பறமா அப்பாவோட சேந்து அந்த கல்ல வெளிய எடுத்தான் அந்த பையன்
குழந்தைகளை இந்த உலகத்துல எந்த உதவியும் இல்லாம போனாலும் உங்கள பெத்தவங்க இருக்கிறவர உங்களுக்கு உதவி கிடைக்கும் அதனால என்ன நடந்தாலும் உங்க அப்பா அம்மா கிட்ட சொல்லுங்க