Tamil Story for Kids – Sun Moon and Wind:- ஒரு காலத்துல சூரியனும்,நிலவும் ,வாயுவும் அவுங்க அம்மா நட்சரதத்தோட வாழ்ந்துகிட்டு வந்தாங்க.

ஒருநாள் அவுங்க தாத்தா பாட்டியோட வெளியில சாப்பிட போனாங்க.
எல்லோரும் நல்ல நல்ல சாப்பாடா வாங்கி சாப்பிட ஆரம்பிச்சாங்க.

நிலா மட்டும் தன்னோட அம்மா வீட்ல இருக்குறத நினச்சு அவுங்களுக்கு கொஞ்சம் சாப்பாடு எடுத்து வச்சது

எல்லோரும் வீடு திரும்புவதும் நட்சத்திரம் எனக்கு என்ன கொண்டு வந்திங்கனு கேட்டுச்சு
சூரியன் நாள் நல்லா சாப்பிட தான் போனேன் அதனால நல்லா சாப்பிட்டு மட்டும் வந்தேன்னு சொல்லுச்சு
வாயு என்னால அதிக சாப்பாட்டை சுமக்க முடியாது அதனால உங்களுக்கு கொண்டு வரலன்னு சொல்லுச்சு
அடுத்ததா நிலா அம்மா நான் உங்களுக்கு சாப்பாடு எடுத்துட்டு வந்துருக்கேனு சொல்லுச்சு.
இத எல்லாம் கேட்ட நட்சத்திரம் சூரியன பாத்து நீ ரொம்ப சுயநலத்தோடு இருக்க அதனால உன்னோட வெப்பத்த வெளிப்படுத்த முடியாம நீயா எரிஞ்சுக்கிட்டு இருன்னு சாபம் கொடுத்தாங்க

வாயுவ பாத்து உன்னால முடியும்னாலும் சோம்பேறித்தனமா நீ வேலைசெய்ய மாற்ற அதனால ஓய்வில்லாம வீசிகிட்டே இருன்னு சாபம் கொடுத்தாங்க

நிலவ பத்து நீ ரொம்ப கருணையோட இருக்க இனிமே உன்ன பத்த எல்லோரும் சாந்த மடைவாங்க உன் உள்ளத்துக்கு ஏத்த மாதிரி குளிர்ச்சியோட வானத்துல பிரதிபலினு சொன்னாங்க
1 thought on “Tamil Story for Kids – Sun Moon and Wind”
Comments are closed.