Rabbit Story in Tamil – முயலும் நண்பர்களும் Tamil Moral Story :- ஒரு காட்டு பகுதியில ஒரு முயல் வாழ்த்துகிட்டு வந்துச்சு , அதுக்கு நிறைய நண்பர்கள் இருந்தாங்க, தனக்கு நிறைய நண்பர்கள் இருக்குறதால தனக்கு எந்த ஆபத்தும் வராதுன்னு இறுமாப்போட இருந்துச்சு

ஒரு நாள் காட்டுவழியே போய்கிட்டிருந்த அந்த முயல ஒரு வேட்டைக்கார நாய் பாத்தது, உடனே அந்த முயல தொரத்த ஆரம்பிச்சது அந்த நாய்
வேகமா ஓடிப்போன முயல் குரங்குகிட்ட போயி “குரங்காரே குரங்காரே என்ன ஒரு நாய் தொரத்திக்கிட்டு வருது என்ன காப்பாத்துங்கன்னு சொல்லுச்சு”

இத கேட்ட குரங்கு அடடா என்னால உன்ன காப்பாத்த முடியும் நான் கொஞ்சம் வேலைய இருக்கேன் நீ கரடி கிட்ட உதவி கேளுன்னு சொல்லுச்சு
வேகமா கரடிக்கிட்ட ஓடிப்போன முயல் “கரடியாரே கரடியாரே என்ன ஒரு நாய் தொரத்திக்கிட்டு வருது என்ன காப்பாத்துங்கன்னு சொல்லுச்சு”
இத கேட்ட கரடி அடடா என்னால உன்ன காப்பாத்த முடியும் நான் கொஞ்சம் வேலைய இருக்கேன் நீ யானை கிட்ட உதவி கேளுன்னு சொல்லுச்சு
வேகமா யானைகிட்ட ஓடிப்போன முயல் “யானையாரே யானையாரே என்ன ஒரு நாய் தொரத்திக்கிட்டு வருது என்ன காப்பாத்துங்கன்னு சொல்லுச்சு”

இத கேட்ட கரடி அடடா என்னால உன்ன காப்பாத்த முடியும் நான் கொஞ்சம் வேலைய இருக்கேன் நீ வேற யார்கிட்டயாவது கிட்ட உதவி கேளுன்னு சொல்லுச்சு
யாருமே உதவ வராததால ரொம்ப சோர்வான முயல் நாய் வந்து தன்னை பிடிச்சாலும் பரவாயில்லைனுமெதுவா நடக்க ஆரம்பிச்சது
அப்பத்தான் மரத்துமேல இருந்த ஒரு எலி முயலே முயலே அங்க பாரு கீழ என்னோட வலை இருக்கு அதுக்குள்ள போயி தப்பிச்சுக்கன்னு சொல்லுச்சு

உடனே எலி வலைக்குள்ள போன முயல் வேட்டை நாய்கிட்ட இருந்து தப்பிச்சிடுச்சு
இந்த கதைல இருந்து நாம என்ன தெரிச்சுகிட்டம்னா நாம எத்தனை பலம் வாய்ந்த நண்பர்களை வெச்சிருக்குறத விட நமக்காக பாடு படுற ஒரு நல்ல நண்பனை வச்சிருந்தா போதும்