யானை குழந்தைகள் கட்டுரை – Tamil Kids Essay About Elephants:- யானைகள் நிலத்தில் வாழும் விலங்குகளில் மிக பெரியது ஆகும்
இரண்டு வயதிற்கு பிறகே யானைகளுக்கு கொம்புகள் முளைக்கின்றன
மிகவும் கெட்டியான தோல் யானைக்கு உண்டு ,அது யானையின் உடலில் நீரின் அளவை கட்டுக்குள் வைக்க உதவுகிறது
யானையின் துதிக்கை உணவு பொருட்களை தூக்க பயன்படுகிறது
மேலும் நீரினை உறிஞ்சி வாய்க்கு செலுத்தவும் பயன்படுகிறது
ஆசிய யானைகள் ஆப்ரிக்க யானைகள் என இரண்டுவகை யானைகள் பூமியில் உள்ளன
யானைகள் நீந்தும் போது துதிக்கையை மூச்சுவிட பயன்படுத்துகின்றன
பொதுவாக யானைகளுக்கு 26 பற்கள் இருக்கும்
புதிதாக பிறந்த யானைக்குட்டி 90-100 கிலோ எடை இருக்கும்
யானை சராசரியாக 660 நாட்கள் கர்ப்பமாக இருந்து குட்டி ஈனுகின்றன
யானைகள் சராசரியாக 65 வருடங்கள் வாழுகின்றன
யானைகள் குட்டியிட்டு பால் கொடுக்கும் பாலூட்டி இனத்தை சார்ந்தது
Long Kids Essay On The Elephant in Tamil
யானை கட்டுரை
யானைகள் புவியில் வாழும் விலங்குகளில் மிகப்பெரிய விலங்கு ஆகும் ,தொன்று தொட்டு நிலத்தில் வாழும் பாலூட்டி இனத்தை சார்ந்த மிருகம் யானை மட்டுமே .
யானை 600 நாட்களுக்கு மேலாக கர்பம் தரித்து குட்டிகளை ஈனுகின்றன ,அவை பொதுவாக 120 கிலோ எடை உள்ளதாக இருக்கின்றன
யானைகளுக்கு கம்பீரமான துதிக்கையும் , தந்தங்களுக் உண்டு,அவை மிக கடினமான பொருட்களை இலகுவாக தூக்க பயன்படுகின்றன
யானையின் துதிக்கை யானைகள் நீந்தும் போது சுவாசிக்கவும் ,பொருட்களை வளைத்து தூக்கவும் பயன்படுகின்றன
யானையின் தந்தங்கள் மிக கடினமான பொருட்களை தூக்கும் போது யானைக்கு உதவுகின்றன
யானை நிலைதடுமாறி புவியில் சரியும் போது யானை தனது தந்ததை தரையில் ஊண்டி மீண்டும் எழுவதற்கு பயன்படுத்துகின்றன
ஆசிய யானைகள் , ஆப்ரிக்க யானைகள் என இரண்டுவாகா யானைகள் இந்த பூமியில் இருக்கின்றன , மிக பெரிய காதை வைத்தே இவை இருந்து பகுக்க படுகின்றன
யானைகள் கூட்டமாக வாழும் பழக்கம் உடையவை , குட்டி யானைகளை தாய் மட்டுமில்லாமல் கூட்டத்தில் உள்ள யானைகள் அனைத்தும் சேர்ந்து பராமரித்து பாதுகாக்கின்றன
யானைகளுக்கு மனிதனை போன்ற கூர்ந்த அறிவும் ,அதீத ஞாபக சக்தியும் இருக்கும்