Story in Tamil For Kids – மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டும் :- ஒரு ஆத்துக்கு பக்கத்துல ஒரு வாத்து கூட்டம் இருந்துச்சு. அதுல அஞ்சு குட்டி குட்டி வாத்துகளும்.அம்மா அப்பா வாத்தும் இருந்துச்சு.
வாத்து குட்டிகள் ரொம்ப சின்னதா இருந்ததால உணவு தேடி வெளிய போகாதுங்க
அதுங்களுக்கு அவுங்க அம்மாதான் உணவு தேடி எடுத்துட்டு வந்து கொடுக்கும்.
அத சாப்டுட்டு விளையாடுறதுதான் அந்த குட்டி வாத்துகளுக்கு வேலையே
ஒருநாள் அந்த வாத்துகளோட பாட்டி வாத்து வந்தது, எல்லா குட்டி வாத்துகளும் அவுங்க பாட்டியா வாங்க வாங்கனு கூப்புடுச்சுங்க
ஒங்க அம்மா எங்கன்னு கேட்டுச்சு பாட்டி வாத்து
அம்மா உணவு எடுத்துட்டு வர போயிருக்காங்கன்னு சொல்லுச்சுங்க அந்த குட்டி குட்டி வாத்துங்க
ஓ அப்படியா நீங்க சாப்பிட்டதும் தான் உங்க அம்மா சாப்பிடுவாங்களானு கேட்டுச்சு பாட்டி வாத்து
இத கேட்ட குட்டி வாத்துங்க திடுக்கிடுச்சுங்க, அடடா நாம அம்மா சாப்பிடுறத பாத்ததே இல்லையேன்னு யோசிச்சுங்க
பாட்டி நாங்க மிக பெரிய தவறு செஞ்சுட்டோம் அம்மா கொண்டுவர்ற உணவ மிச்சம் வைக்காம நாங்களே சாப்பிட்டுடுவோம்
குழந்தைகளா இனிமே அப்படி செய்யாதீங்க குழந்தைகளான நீங்க சின்ன தப்பு செய்றது சகஜம்தான்
ஆனா அது தப்புன்னு தெரிஞ்சு திரும்ப திரும்ப செய்யக்கூடாது
இனிமே நீங்க சாப்பிடும்போது உங்க அம்மாவையும் சாப்பிட சொல்லுங்க
எவ்வளவு குறைவான உணவா இருந்தாலும் உங்களுக்குள் பகுந்துகிட்டு சாப்பிடுங்கன்னு சொல்லுச்சு
பழமொழி :- மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம்