Something More valuable – Good moral stories:- பிரேசில் நாட்டுல ஒரு பணக்காரர் இருந்தாரு

அவர் ஒருநாள் எல்லாரு கிட்டயும் சொன்னாரு, நான் இந்த திங்க கிழம என்னோட புது காரையும் , நிறைய பணத்தையும் , எனக்கு தேவயானதாயும் சுடுகாட்டுல புதைக்க போறேன்னு
இத கேட்ட எல்லாரும் ஏன் எதுக்குன்னு கேட்டாங்க
அதுக்கு அவரு சொன்னாரு இல்ல நான் இறந்ததுக்கு அப்புறமா எனக்கு அந்த பொருட்கள் எல்லாம் தேவபடும்ல அதான்னு சொன்னாரு
அத கேட்ட எல்லாரும் இவருக்கு என்ன பைத்தியம் புடிச்சுடுச்சான்னு பாத்தாங்க
இந்த செய்தி எல்லாருக்கும் தெரிய வந்துச்சு ,பல பத்திரிக்கை காரங்களும், தொலைக்காட்சி காரங்களும் இந்த நிகழ்ச்சியை நேர்ல பாக்க வந்தாங்க
அப்ப அங்க வந்த அந்த பணக்காரர் சொன்னாரு
இவ்வளவு விலை அதிகமான பொருட்கள நான் புதைக்கிறது உங்க எல்லாத்துக்குக்க்கும் கஷ்டமா இருக்கான்னு கேட்டாரு
அதுக்கு எல்லாரும் ஆமாம்னு பதில் சொன்னாங்க
அப்பதான் அந்த பணக்காரர் சொன்னாரு இந்த பொருட்களுக்கு மேல விலைமதிப்பற்ற மனித உடல் உறுப்புகளை நீங்க புதைக்கும்போது இந்த உறுத்தல் உங்களுக்கு இல்லையானு கேட்டாரு
அப்பதான் எல்லாருக்கும் புரிஞ்சது இவர் முட்டாள் இல்லை உடல் உறுப்பு தானத்தை எல்லா மக்களுக்கும் அழகா புரிய வச்ச புத்திசாலின்னு எல்லாரும் பாராட்டுனாங்க