Snow White And The Seven Dwarfs Tamil Story-ஸ்னோ ஒயிட்டும் ஏழு குள்ளர்களும் :- ஒரு நாட்டுல ஒரு ராஜா ராணி இருந்தாங்க

ரொம்பநாளா அவுங்களுக்கு குழந்தைகள் இல்லாம இருந்துச்சு ,அதனால கடவுள்கிட்ட குழந்தை வேணும்னு வேண்டிகிட்டே இருந்தாங்க

ஒருநாள் தோட்டத்துல சாமிகிட்ட வேண்டிக்கிட்டு இருந்தாங்க அரசி ,அப்ப பனி கொட்ட ஆரம்பிச்சுச்சு ,அது பார்க்கறதுக்கு அழகா இருந்துச்சு பக்கத்துலயே ஒரு சிகப்பு ரோஜாவும் இருந்துச்சு

உடனே அரசி கடவுளே எனக்கு குழந்தை பிறந்தா அது இந்த பனி போல அழகாவும் அதோட உதடு இந்த சிவப்பு ரோஜா மாதிரியும் இருக்கணும்னு ,அப்படி ஒரு குழந்தை எனக்கு கிடைச்சா நான் என்னோட உயிரை கடவுளுக்கு கொடுக்குறேனு வேண்டிக்கிட்டாங்க

கொஞ்ச நாள் கழிச்சி அவுங்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்துச்சு ,அதேநேரத்துல அரசியும் சாமிகிட்ட போய்ட்டாங்க

ரொம்ப கவலையான அரசர் அந்த குழந்தைக்கு ஸ்னோ ஒயிட்னு பேர் வச்சு வளர்க்க ஆரம்பிச்சாரு
அப்பதான் ஒரு சூனியக்காரி அரசரை பார்க்க வந்தா

அவ வரும்போது தன்கூட ஒரு மந்திர கண்ணாடியையும் கொண்டுவந்தா

அரசர்கிட்ட வந்த அந்த சூனியக்காரி உங்களை நான் கல்யாணம் பண்ணிக்கிடணும்னு கேட்டா ,அப்படி பண்ணிக்கிட்டா ஸ்னோ ஒயிட்ட நான் நல்லா பத்துக்குவேன்னு சொன்னா
அரசரும் அவள கல்யாணம் பண்ணிகிட்டாரு , கொஞ்ச நாள் கழிச்சி பால்ல விஷம் வச்சு அரசரை கொன்னுட்டு இவளே நாட்ட ஆட்சி செய்ய ஆரம்பிச்சா

ஒருநாள் தன்னோட மந்திர கண்ணாடி முன்னாடி நின்னு தன்னோட அழகை ரசிச்சிகிட்டு இருந்தா சூனியக்காரி
அப்ப அந்த கண்ணாடி கிட்ட சூனியக்காரி கேட்டா இந்த உலகத்துலயே அழகான பெண் யாருன்னு

உடனே ஸ்னோ ஒயிட் தான் இந்த உலகத்துலயே அழகான பெண்ணுன்னு சொல்லுச்சு
உடனே கோபமான சூனியக்காரி ,தன்னோட தளபதிய கூப்பிட்டு ஸ்னோ ஒயிட்ட காட்டுக்கு கூட்டிட்டு போய் கொன்னுட சொன்னா

அந்த தளபதியும் ஸ்னோ ஒயிட்ட கூட்டிகிட்டு காட்டுக்கு போனாரு ,அவரு கத்திய எடுக்குறப்பதான் ஸ்னோ ஒயிட்டோட கண்ண பார்த்தாரு ,அவரோட மனசு உடனே மாறிடுச்சு ,அடடா சூனியக்காரி பேச்சை கேட்டுட்டு இந்த நாட்டோட உண்மையான இளவரசியை கொள்ள பார்த்தோமேனு வருத்தப்பட்டாரு

உடனே ஸ்னோ ஒயிட்ட எங்கயாவது போய் உயிர் பிழைச்சுக்கணு சொல்லிட்டு ,அரண்மனைக்கு வந்து ஸ்னோ ஒயிட்ட கொன்னுட்டேனு சூனியக்காரிகிட்ட போய் பொய் சொன்னாரு அந்த தளபதி

இதே கேட்ட சூனியக்காரி இனிமே இந்த நாட்டுக்கு யாரும் வாரிசு கிடையாதுன்னு சொல்லி தன்னை தானே அரசியா அறிவிச்சுகிட்டா ,தொடர்ந்து நாட்டு மக்களுக்கு தொல்லை கொடுத்துகிட்டே இருந்தா
காட்டுக்குள்ள போன ஸ்னோ ஒயிட் அங்க ஒரு குட்டி வீட்ட பார்த்தா ,அது ரொம்ப குட்டியா இருந்துச்சு ,உடனே அதுக்குள்ள போன ஸ்னோ ஒயிட்க்கு ஆச்சர்யமா இருந்துச்சு ,

அங்க ஏழு குட்டி காட்டில் இருந்துச்சு,ஏழு பேர் பயன்படுத்துற பொருட்கள் எல்லாமே இருந்துச்சு ,ஆனா அது எல்லாமே ரொம்ப சின்னதா இருந்துச்சு

அப்பத்தான் அந்த வீட்டுக்குள்ள ஏழு குள்ளர்கள் வந்தாங்க ,அவுங்க எல்லாரும் ரொம்ப குள்ளமா ஒருந்தாலும் வயசுல பெரியவங்களா இருந்தாங்க
ஸ்னோ ஒயிட்ட பார்த்த அவுங்க அவளோட கதையை கேட்டு தெரிஞ்சிக்கிட்டாங்க

அப்பத்தான் ஒருத்தர் சொன்னாரு ஸ்னோ ஒயிட் நீ இங்கயே பத்திரமா தங்கலாம் ,நாங்க உனக்கு பாதுகாப்பா இருப்போம்னு சொன்னாரு
உடனே இன்னொருத்தர் சொன்னாரு என்னதான் நீ இங்க பத்திரமா இருந்தாலும் அந்த சூனியக்காரி இருக்குற வரைக்கும் உனக்கு ஆபத்துதான்

அதனால எங்க ஒவ்வொருத்தர் கிட்ட இருக்குற திறமை எல்லாத்தையும் நீ காத்துக்கிடணும்னு சொல்லி எல்லாரும் அவளுக்கு ஒவ்வொன்னு சொல்லி கொடுக்க ஆரம்பிச்சாங்க
ஒருத்தர் அவளுக்கு ஈட்டி எரிய சொல்லி கொடுத்தாரு ,இன்னொருத்தர் அவளுக்கு வில் விட சொல்லிக்கொடுத்தார் ,இன்னொருத்தர் அவளுக்கு பாடம் சொல்லி கொடுத்தாரு.

இப்படி ஸ்னோ ஒயிட் தன்னோட திறமைய வளர்த்துக்கிட்டு வந்தப்ப ஒருநாள் ,அந்த சூனியக்காரி மீண்டும் அந்த மந்திர கண்ணாடி கிட்ட இந்த உலகத்துலயே யாரு அழகுன்னு கேட்டா ,அதுக்கு அந்த கண்ணாடி சொல்லுச்சு இப்பவும் ஸ்னோ ஒயிட்தான் அழகுன்னு சொல்லுச்சு

உடனே கோபமான அந்த சூனியக்காரி கண்ணடிக்கிட்ட ஸ்னோ ஒயிட் எங்க இருக்கானு கேட்டா
உடனே அந்த மந்திரக்கண்ணாடி ஸ்னோ ஒயிட் ஏழு குள்ளர்கள் கூட பத்திரமா இருக்கானு சொல்லுச்சு

உடனே கிழவி வேஷம் போட்டுக்கிட்டு காட்டுக்கு போனா அந்த சூனியக்காரி ,அப்பத்தான் குலத்துக்கு போய் தண்ணி எடுத்துக்கிட்டு இருந்த ஸ்னோ ஒயிட்ட பார்த்தா சூனியக்காரி

ஸ்னோ ஒயிட்கிட்ட வந்த சூனியக்காரி தனக்கு ரொம்ப தாகமா இருக்குனு சொல்லி குடிக்க தண்ணி கேட்டா

உடனே ஸ்னோ ஒயிட்டும் அவளுக்கு தண்ணி கொடுத்தா ,அதுக்கு நன்றி சொல்லிட்டு ஒரு ஆப்பிள் பழத்தை ஸ்னோ ஒயிட் கிட்ட கொடுத்து சாப்பிட சொன்னா

அத சாப்பிட்ட ஸ்னோ ஒயிட் மயங்கி விழுந்துட்டா , உடனே சந்தோஷத்துல அங்க இருந்து போன சூனியக்காரி அங்க இருந்த புதை குழில விழுந்து மாட்டிக்கிட்டா

காட்டுக்கு தண்ணி எடுக்க போன ஸ்னோ ஒயிட் திரும்ப வராததால தேடி வந்த அந்த ஏழு குள்ளர்களும் ஸ்னோ ஒயிட் மயங்கி கிடக்குறத பார்த்தாங்க

அவள சோதிச்சு பார்த்தப்ப அவ சாகலைனு தெரிஞ்சிக்கிட்டாங்க ,அவள ஒரு பெட்டியில வச்சு தங்க வீட்டுக்கு தூக்கிட்டு போய் வச்சிருந்தாங்க

சில நாள் கழிச்சு அங்க பக்கத்து நாட்டு இளவரசன் வந்தான் ,மருத்துவம் தெரிஞ்ச அந்த இளவரசன் சில மூலிகைகள் கொண்டுவந்து ஸ்னோ ஒயிட்டுக்கு கொடுத்தான்

மயக்கம் தெரிஞ்சு எழுந்த ஸ்னோ ஒயிட்கிட்ட ,உங்க நாட்டை பிடிச்சிருந்தா சூனியக்காரி செத்து போய்ட்டா , நீங்கதான் உண்மையான இளவரசி நீங்க நாட்டுக்கு வாங்கனு கூட்டிட்டு போய் அரண்மனைல விட்டான் அவன்

தங்களோட இளவரசி திரும்பி வந்துட்டது தெரிஞ்ச எல்லாரும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்க , அவ கூட தொணைக்கு வந்த அந்த ஏழு குள்ளர்களும் அவளுக்கு ஆட்சி செய்ய உதவி செஞ்சதோட ,அவள காப்பாத்துன இளவரசனுக்கே அவளை திருமணம் செஞ்சு வச்சாங்க

அதுக்கு அப்புறமா ஸ்னோ ஒயிட் ரொம்ப வருசமா நல்லபடியா அந்த நாட்டை ஆட்சி செஞ்சு புகழ் அடைஞ்சா
