Creative Little Girl – small tamil story for kids :- ஒரு ஸ்கூல்ல அட்மிஷன் நடந்துக்குட்டு இருந்துச்சு

அங்க ஒரு சின்ன பொண்ணுக்கு lkg சேக்க அவுங்க அம்மா அப்பா கூட்டிகிட்டு வந்தாங்க
அப்ப அந்த டீச்சர் கேட்டாங்க உன்ன பத்தி எதாவது சொல்லேன்னு சொன்னாங்க
அதுக்கு அந்த சின்ன பொண்ணு சொல்லுச்சு நான் எழுதுன ஒரு கதையை உங்களுக்கு சொல்லட்டுமான்னு கேட்டுச்சு
ஓஹ் நீ கதை எல்லாம் எழுதுவியான்னு கேட்டாங்க
ஆமான்னு சொன்ன அந்த குட்டி பொன்னு சொல்லுச்சு ஒரு நாள் ராமர் கிட்ட இருந்து சீதையை இராவணன் ஸ்ரீலங்காவுக்கு கடத்திட்டு போயிட்டான்
உடனே ராமர் அனுமார் கிட்ட ஹெல்ப் கேட்டாங்க, உடனே அனுமார் பறந்து போனாரு போற வழியில சஞ்சீவி மலை இருந்துச்சு
அடடா இது லக்ஷ்மணருக்கு தேவைப்படுற மலையாச்சேன்னு அந்த மலைய தூக்க பாத்தாரு அவரால முடியல
உடனே ஹல்க்க கூப்பிட்டாரு அவர் வந்து மலைய உடைச்சு அனுமார் தூக்க உதவி பண்ணுனாரு
அதுக்கு அப்புறமா வேகமா பறக்க முடியல அதனால ஸ்பைடர் மென் உதவிய கேட்டாரு அனுமார்
ஸ்பைடர் மென் வந்து அனுமாருக்கு சீதா கிட்ட போக ஹெல்ப் பண்ணுனாரு
பஸ் ஸ்டாண்ட் வந்த அவுங்களுக்கு வீட்டுக்கு போக வழி தெரியல உடனே
டோரா கிட்ட உதவி கேட்டாங்க அவுங்களும் உதவுன்னாங்க
அவ்ளோதான் கதை அப்படின்னு சொல்லுச்சு அந்த குட்டி பாப்பா
எல்லோரும் அந்த பொண்ணுக்கு சீட் கிடைக்காதுன்னு பாத்தாங்க
அப்ப அந்த டீச்சர் சொன்னாங்க இந்த சின்ன வயசுல தகவல்களை ஒண்ணுசேக்குற திறமை உங்க குழந்தைக்கு இருக்கு அதுக்கு இந்த ஸ்கூல்ல அட்மிசன் கொடுக்குறோம் ,
அவளுக்கு இப்ப இருக்குற மாதிரியே சுதந்திரத்த நீங்க கொடுத்தீங்கன்னா அவ நல்லா வருவான்னு சொன்னாங்க