Salt in the Lake – small story for kids in tamil : –ஒரு இளைஞனுக்கு வாழ்க்கையே வெறுத்துப்போச்சு , அவனுக்கு ரொம்ப கஷ்டமா வருதுன்னு வருத்தம்,அதனாலே பக்கத்து ஊருல இருக்குற சாமியாகிட்ட போயி இத பத்தி சொன்னான்
அதுக்கு அந்த சாமியார் ஒரு பிடி உப்பையும் ஒரு பாத்திரத்துல தண்ணியையும் கொண்டு வந்து கொடுத்தாரு
அந்த உப்ப இந்த பாத்திரத்துல இருக்குற தண்ணீல போடுன்னு சொன்னாரு
அவனும் அதே மாதிரி செஞ்சான்
உடனே அந்த தண்ணிய குடிக்க சொன்னாரு அந்த சாமியார்
அந்த இளைஞனும் குடிச்சான் , எப்படி இருக்குன்னு கேட்டாரு சாமியார் ரொம்ப உப்பா இருக்கு குடிக்கவே கஷ்டமா இருக்குன்னு சொன்னான் அந்த இளைஞன்
உடனே இன்னொரு பிடி உப்ப அவன்கிட்ட கொடுத்து பக்கத்துல இருக்குற ஏரிக்கு கூட்டிட்டுபோய் கரைக்க சொன்னாரு
அந்த ஏரில இருந்து தண்ணி குடிக்க சொன்னாரு ,இப்ப எப்படி இருக்குன்னு கேட்டாரு
அவன் சொன்னான் ரொம்ப நல்லாத்தான் இருக்குனு சொன்னான்
இதுமாதிரிதான் உன் நிலைமையும் வாழ்க்கைல துன்பம் உப்புமாதிரி அது எப்பவும் ஒரே அளவுதான் இருக்கும் கூடவும் குறையவும் செய்றது இல்லை
ஆனா நாம மனசு இந்த பாத்திரமாதிரியா இல்ல ஏரி மாதிரியான்னு நாமதான் முடிவு பண்ணனும்
இந்த பாத்திரம் மாதிரி நாம இருந்தம்னா அந்த துன்பம் நம்மள நிம்மதியா இருக்க விடாது
இந்த ஏரி மாதிரி நீ இருந்தானா எந்த துன்பம் வந்தாலும் கவலை படாம மேற்கொன்டு நடக்க வேண்டிய செயல்கள்ல கவனம் செலுத்த முடியும்னு சொன்னாரு
இத கேட்டு தெளிவான அந்த இளைஞன் அவருக்கு நன்றி சொல்லிட்டு வீட்டுக்கு போனான்