Singing Donkey Kids Story in Tamil – பாட்டு பாடிய கழுதை:-ஒரு காட்டுக்கு பக்கத்துல ஒரு வீடு இருந்துச்சு
அந்த வீட்டுல ஒரு வியாபாரி வாழ்ந்துட்டு வந்தாரு அவர் ஒரு கழுத வழத்துகிட்டு வந்தாரு
அந்த கழுதைக்கு எப்பவும் சட்டி நிறைய உணவு வைப்பாரு அந்த வியாபாரி
என்னதான் நிறைய உணவு கிடைச்சாலும் அந்த கழுதைக்கு பசி அடங்கவே இல்ல அதனால் தினமும் ராத்திரி பக்கத்து வயலுக்கு நடந்து போயி அங்க இருக்கிற விவசாய பொருட்களை தின்னு பசிய போக்கிகிச்சு
தினமும் இதே மாதிரி வயலுக்கு போன அந்த கழுதைய பக்கத்து காட்டுல வாழுர ஒரு நரி பாத்துச்சு
கழுதை நண்பரே ஏன் தினமும் ஒரே மாதிரி உணவா சாப்பிடுரீங்க
என் கூட வாங்க உங்களுக்கு பக்கத்துல இருக்குற வெள்ளரி தோட்டத்த காட்டரே,அந்த வெள்ளரித்தோட்டத்துல பெரிய பெரிய வெள்ளரி காய்கள் இருக்கு நாம ரெண்டு பேரும் அத தின்னலாம்னு கூப்டுச்சு
இதக்கேட்ட அந்த கழுதைக்கு ரொம்ப சந்தோசமாகிடுச்சு உடனே அந்த நரியோட சேந்து அந்த வெள்ளரித்தோட்டத்துக்கு போச்சு அந்த கழுத அங்க நிறை வெள்ளரிகாய்களை தின்னுச்சு அந்த நரியும் கழுதையும் புது வெள்ளரிகளை தின்ன அந்த கழுதக்கு ரொம்ப சந்தோசமாகிடுச்சு
நரியாரே நரியாரே எனக்கு இப்ப பாடனும்போல இருக்குனு சொல்லுச்சு இதக்கேட்ட அந்த நரி வேணாம் வேணாம் கழுதையே நீ பாட்டுப்பாடுனாலும் அது கனைக்கிறமாதிரிதான் இருக்கும் அதனால நீபாடாதனு சொல்லுச்சு ஆனா அந்த கழுத பாட ஆரம்பிச்சுச்சு
அந்த கழுதையோட சத்தத்த கேட்ட அந்த வெள்ளரித் தோட்டத்து முதலாளி வேகமா ஓடி வந்து அந்த கழுதையையும் நரியையும் கட்டையால அடிச்சாரு
கூடா நட்பு கேடாய் முடியும்ட்ற பழமொழிக்கு ஏத்தமாதிரி கழுதையோட சவகாசம் வச்சுகிட்ட அந்த நரிக்கு நல்லா அடிகிடைச்சது “