Short story on birds with moral பறவையின் கூடு :- ஒரு காட்டு பகுதியில ஒரு குட்டி குருவி வாழ்ந்துகிட்டு வந்துச்சு,அந்த குருவிக்கு தனக்குன்னு ஒரு வீடு கட்டணும்னு ரொம்ப ஆச

அதனால கஷ்டப்பட்டு குட்டி குட்டி குச்சிகளை சேகரிச்சு சின்னதா ஒரு வீடு கட்டுச்சு ,

ஆனா அந்த காட்டுல அடிக்கிற வேகமான காத்தால அந்த கூடு சீக்கிரமே உடைஞ்சு போச்சு
அதனால சோகமான அந்த குருவி ஒருநாள் பக்கத்துல இருக்குற கிராமத்துக்கு மேல பறந்துபோச்சு

அடடா இந்த மனிதர்கள் மட்டும் எப்படி இவ்வளவு அழகான வீடு கட்டுறாங்கன்னு பாத்துகிட்டே போன அந்த குருவி ,களிமண்ண பூசி வீடு கட்டுறத பாத்துச்சுச்சு ஒரு இடத்துல

அடடா மனிதர்கள் தங்களோட வீட நல்ல பாதுகாப்போடு கட்டுறது மாதிரி நாமளும் கட்டாம இப்படி சோகமா இருந்துட்டமேன்னு நினைச்சது

அதனால காட்டுக்கு வந்த அந்த குருவி குச்சிகளோட சேத்து களிமண்ணையும் சேர்த்து புது வீடு கட்டுச்சு

மிக பெரிய காத்து அடிச்சப்ப கூட அந்த கூடு களையாம இருந்துச்சு
குழந்தைகளை பழைய வழி எதுவா இருந்தாலும் புதிய மாற்றங்கள நாம பின்பற்ற ஆரம்பிக்கணும் அப்பதான் புது வழியில வீடுகட்டுன அந்த குருவி மாதிரி நிறைய சாதிக்க முடியும்
Super Story ?♥️
Nice story ♥️?
Thanks for Your FeedBack