Rabbit Squirrel and Owl Tamil Moral story – அணில் முயல் ஆந்தை கதை :- ஒரு காட்டு பகுதியில ஒரு அணில் வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,அந்த அணிலுக்கு ஒரு முயல் நண்பனும் ,மந்திரம் தெரிஞ்ச ஒரு ஆந்தையும் நண்பர்களா இருந்தாங்க

அவுங்க மூணு பேரும் எப்பவும் தங்களோட இடத்துல ஓடி பிடிச்சி விளையாண்டுக்கிட்டே இருப்பாங்க

ஒரு நாள் முயலோட வீட்டுக்கு பக்கத்துல ஒளிஞ்சி பிடிச்சி விளையாண்டாங்க

அப்ப அணில் மெதுவா முயலோட வீட்டுக்குள்ள போயி ஒளிஞ்சிக்கிட பாத்துச்சு ,

அப்ப தெரியும அணிலோட வால் பட்டு முயலுக்கு ரொம்ப பிடிச்சமான ஜாடி ஒடஞ்சு போச்சு

அணிலுக்கு என்ன செய்யுறதுனே தெரியல ,அடடா இந்த ஜாடி முயலுக்கு ரொம்ப பிடிச்ச ஜாடியாச்சே இது ஒடஞ்சது தெரிஞ்சா முயல் ரொம்ப வருத்தப்படுமேனு நினைச்சது அணில்

இப்படி தெரியாம ஒரு பெரிய தப்ப பண்ணிட்டமேன்னு வருத்தப்பட்ட அணில் ,அந்த ஒடஞ்ச ஜாடிய எடுத்துட்டு போயி ஒரு மரத்தோட அடிப்பகுதியில இருந்த பொந்துல ஒளிச்சு வச்சிடுச்சு

விளையாடி முடிச்ச முயல் வீட்டுக்குள்ள வந்துச்சு , உள்ள வந்த முயல் தனக்கு ரொம்ப பிடிச்ச ஜாடி காணாம போனத பார்த்து திகைச்சு போச்சு

முயல் ரொம்ப வறுத்த படுறத பார்த்த அணிலுக்கு ரொம்ப சங்கடமா போச்சு ,இதுக்கு என்ன தீர்வுன்னு மந்திர ஆந்தை கிட்ட போய் கேட்டுச்சு அணில்
தெரிஞ்சி செஞ்ச தப்போ தெரியும செஞ்ச தப்போ அந்த தப்ப திருத்திக்கிட ஒரு மந்திரம் என்கிட்ட இருக்குனு சொல்லுச்சு ஆந்தை

உடனே குதூகலமான அணில் அந்த மந்திரத்தை சொல்ல சொல்லி கேட்டுச்சு ,உடனே மந்திர ஆந்தை சொல்லுச்சு அந்த மந்திரம் என்னனா அதுதான் மன்னிப்புனு சொல்லுச்சு
அணிலுக்கு ஒண்ணுமே புரியல ,நீ அந்த ஜாடிய தெரியாம ஒடச்சதுல தப்பே இல்ல ஆனா அந்த தப்பு அடுத்தவங்களுக்கு தெரிய கூடாதுனு அந்த ஒடஞ்ச ஜாடிய ஒளிச்சி வச்சு இன்னொரு தப்ப பண்ணிட்ட

முதல் தவறுக்கு எப்பவும் மன்னிப்பு உண்டு ஆனா நீ செஞ்ச ரெண்டாவது தவறுக்கு மன்னிப்பு கிடையாது ,இருந்தாலும் அது உன்னோட நண்பன் கையில இருக்கு

முதல்ல உன்மைய போய் முயல் கிட்ட சொல்லு அது உன்னோட ரெண்டாவது தவறை சரி செய்யுறதுக்கு ,அடுத்ததா அதுகிட்ட மன்னிப்பு கேள் அது நீ செஞ்ச முதல் தப்ப சரி செஞ்சுடும்னு சொல்லுச்சு ஆந்தை

உடனே அந்த மர பொந்துக்கு போன அணில் அந்த ஒடஞ்ச ஜாடிய எடுத்துட்டு வந்து முயல் கிட்ட காமிச்சுச்சு , நண்பனே நான் தெரியாம உன்னோட ஜாடிய ஒடச்சுட்டேன்
அந்த விஷயம் தெரிஞ்சா நீ ரொம்ப வருத்தப்படுவேன்னு அத ஒளிச்சி வச்சேன் ,ஆனா நீ அந்த ஜாடி தொலைஞ்சு போச்சுன்னு நினச்சு அதைவிட ரொம்ப வருத்தப்படுற
அந்த ஜாடிய ஒடச்சதுக்கும் ,அத உன்கிட்ட இருந்து மறைச்சதுக்கும் என்ன மன்னிச்சிடுனு சொல்லுச்சு

இத கேட்ட முயல் சிரிச்சிகிட்டே சொல்லுச்சு ,அருமை நண்பனே நீ அந்த ஜாடியை ஒடச்சது தெரியாம நடந்த விபத்து ,நீ அத மறைச்சது கூட நான் வருத்தப்பட கூடாதுனு தான்,அதனால எனக்கு இப்ப ஒரு வருத்தமும் இல்லைனு சொல்லி அணில் கிட்ட இருந்த ஒடஞ்ச ஜாடிய வாங்குச்சு

வீட்டுக்குள்ள போய் அணிலும் முயலும் சேர்ந்து அந்த ஜாடிய ஓட்ட வச்சுச்சுங்க ,அந்த ஜாடி இப்ப ரொம்ப அழகாவே இருந்துச்சு ,இத பார்த்து முயல் ரொம்ப சந்தோசப்பட்டுச்சு
உடனே தனக்கு உரிய நேரத்துல நல்லது சொல்லி புரியவச்ச ஆந்தைக்கு நன்றி சொல்லுச்சு அணில்