பொது சொத்துக்களை பாதுகாப்போம் கட்டுரை-Protecting Public Property Essay in Tamil

பொது சொத்துக்களை பாதுகாப்போம் கட்டுரை-Protecting Public Property Essay in Tamil :- அரசுக்கு சொந்தமானதும் நாட்டில் உள்ள அனைவருக்கும் பொதுவானதும் பொது சொத்து என்றழைக்க படுகிறது.ஒரு தனிமனிதன் மட்டுமே சொந்தம் கொண்டாடாமல் ஒரு சமூகமே உரிமை கொண்டாடுவது இந்த பொது சொத்துக்களின் மீதுதான் , பொது மருத்துவமனை ,பொது பேருந்துகள் , தொடர்வண்டி ,பொது இடங்கள் ,சாலைகள் ,சுற்றுலா தளங்கள் ஆகியவை பொது சொத்துக்கள் என்ற வரைமுறைக்குள் வருகின்றன

people riding their bicycle on the road
Photo by Peter Chirkov on Pexels.com

பொதுவாக பொது சொத்துக்கள் வரிகள் மூலமாக அல்லது அரசு பணத்தில் வாங்கப்பட்டு மற்றும் பராமரிக்க பட்டு வருகின்றன. ஒருவர் ஒரு பொது சொத்துக்கு சேதம் விளைவிப்பதின் மூலமாக எனக்கு சொந்தமான ஒன்றை சேதப்படுத்துகிறேன் இதில் என்ன தவறு என்று கேட்க இயலாது ,பொது உடமையாக்க பட்ட ஒரு பொருள் உங்களுக்கு எப்படி சொந்தமோ அதே வகையில் மற்றவருக்கும் சொந்தம் ,அவற்றை சேதப்படுத்துதல் அல்லது அபகரிக்க முற்படுத்தல் தண்டனைக்கு உரிய குற்றமாகும்

பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் எந்த வகையில் குற்றமோ அதே வகையில் அதை பராமரிக்கும் அரசுக்கு தொந்தரவு கொடுக்கும் வகையில் நடந்து கொள்ளுவதும் ,முறையாக பயன்படுத்தாமல் இருப்பதும் குற்றமாகும் ,உதாரணமாக ஒரு தனிநபர் பொது கழிப்பறையை பயன்படுத்துவதில் செய்யும் தவறு அந்த கழிப்பறையை அடுத்தவர் பயன்படுத்தும் போது சங்கடத்தை உண்டு பண்ணுகிறது ,இது போல் தொடர்ந்து அந்த கழிப்பறையை முறையாக பயன்படுத்த தவறினால் ,அந்த கழிப்பறை ஒருவருக்கும் பயன்படாமல் போய்விடுகிறது ,பிறகு கழிப்பறை தேவைப்படும் முதலாவது நபருக்கும் அந்த வசதி கிடைக்காது ,எனவே ஒவ்வொரு முறையும் பொது சொத்துக்களை தமது சொந்த பொருள் போல் பயன்படுத்தி மற்றவருக்கும் பயன்படும் வண்ணம் பாதுகாத்தல் சுதந்திர சமூகத்தின் நிலைப்பாடு ஆகும்

பொது சொத்துக்களை பேணி காக்கும் பனி அரசு நடத்தும் ஆட்சியாளர்களையோ ,அரசு அலுவலர்களையோ மட்டும் சார்ந்தது அல்ல , அவர்களுக்கு அது கடமை எனும் பட்சத்தில் அரசின் ஒரு அங்கமான நமக்கும் அது கடமையாகும்.

பொது சொத்துக்களை பாதுகாக்க எவ்வளவு முயற்சி செய்தும் அரசு தோற்றுப்போகும் தருணங்களில் அந்த நாடு மிக மோசமான நிதி நிலையை சென்றடைகிறது. பொது சொத்துக்களை பாதுகாக்கும் பொறுப்பை சாமானிய மக்கள் ஏற்றுக்கொள்ளும் போது புதிய வசதிகளை ,புதிய பொது சொத்துக்களை அமைக்கும் பணிக்கு தேவையான முதலீடு அரசுக்கு சுலபமாக கிடைக்கிறது

ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் பொது சொத்துக்களை பாதுகாக்கும் அரசின் செலவை இதர செலவுடன் இணைகின்றனர் ,இது நாட்டின் நலனில் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது , ஒரு சமூகம் பொது சொத்துக்களை செவ்வனே பாதுகாத்து அதன் மூலம் நன்மை பெரும் பொழுது ,அவர்களுக்கு புதிய பொது பயன்பாடு சொத்துக்களும் ,பொது உரிமம் கொண்ட வசதிகளும் இலவசமாக கிடைக்க வாய்ப்புள்ளது

இதனை புரிந்துகொள்ள தொடங்கும் போதுதான் ஒரு நாடு வல்லரசாக மாறுகிறது