Picasso Story in Tamil – பிக்காசோ கதை :- நான் கோடீஸ்வரன் இல்லை!
‘மாடர்ன் ஆர்ட்டின் தந்தை எனப் போற்றப் படுபவர், ஸ்பெயின் நாட்டு ஓவியரான பிக்காசோ இவரது முழுப் பெயர், பாப்லோ ரூயிஸ் பிக்காசோ (Pablo Ruiz Picasso, 1881-1973).
இவர் வரைந்த ஓவியம் ஒவ்வொன்றும் பல லட்சம் டாலர் விலை போகக் கூடியது. இவரது ஓர் ஓவியம் ஒரு வீட்டில் இருந்தால், அந்த வீட்டிற்குக் கிடைக்கும் அந்தஸ்தை வெறும் வார்த்தைகளால் விவரித்துவிட முடியாது
இத்தனை அரிய மனிதரான பிக்காசோ ஒரு சமயம் ஒரு சில நெருங்கிய நண்பர்களுக்குத் தனது வீட்டில் ஒரு விருந்து கொடுத்தார்
விருந்தில் கலந்து கொண்ட நண்பர்களில் ஒருவர், பிக்காசோவைப் பார்த்து, “இது உங்கள் லீடுதானா என் எனக்கு ஒரே சந்தேகமாக இருக்கிறது. உங்கள் ஓவியங்களை உலகமே போட்டி போட்டுக் கொண்டு வாங்குகிறது. அப்படியிருக்க உங்கள் வீட்டுச் சுவர்கள் உங்களது ஒரு ஓவியம் கூட இல்லையே” என்றார்
அதற்குப் பிக்காசோ, “நீங்கள் சொல்லுவது உண்மைதான். என் வீட்டுச் சுவர்களில் என் ஓவியங்களை மாட்டி வைக்க எனக்கும் ஆசைதான். ஆனால் பல லட்சம் டாலர் கொடுத்து எனது ஓவியங்களை வாங்க நான் ஒன்றும் கோடீஸ்வரன் அல்லவே என்றா அமைதியாக
அவரது தன்னடக்கத்தை எண்ணி வியந்தார் நண்பர்
பிக்காசோ நினைத்திருந்தால் ஏராளமான ஓவியர் களை அவரது வீட்டுச் சுவர்களில் மாட்டி வைத்திரு கலாம். ஆனால் அப்படிச் செய்வதால் அவருக்கு என்ன பயன்
தனது திறமை மற்றும் செயல் மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும் என்று நினைக்கும் பொது வாதிகள், தங்களுக்கென்று எதையும் தேடிக் கொள்ள மாட்டார்கள் என்பதே இச்சம்பவத்தில் கருத்து அதனால்தான் பிக்காசோ அப்படி பதில் கூறினார்