ஆந்தையின் அறிவு – Owl Story In Tamil-

ஆந்தையின் அறிவு – Owl Story In Tamil ஆந்தையின் அறிவு – Owl Story In Tamil:- ஒரு வேப்ப மரத்துல ஒரு ஆந்தை வாழ்ந்துகிட்டு வந்துச்சு ,ஒருநாள் ஒரு சாமியார் அந்த மரத்தடியில தங்க வந்தாரு

ஆந்தையின் அறிவு - Owl Story In Tamil-

அவருகிட்ட அருள்வாக்கு கேக்க நிறைய பேரு வந்தாங்க ,அப்ப சும்மா கத்திகிட்டே இருந்துச்சு இந்த ஆந்தை.

எல்லாரும் போனதுக்கு அப்புறமா அந்த ஆந்தைய பாத்து அந்த சாமியார் சொன்னாரு ,எனக்கு ஒரு உதவி செய் நீ இன்னைல இருந்து ஒரு வருசத்துக்கு உன்னோட பேச்ச கொறச்சுட்டு நடக்கிறத எல்லாம் உன்னிப்பா கவனினு சொன்னாரு

இது என்ன பெரிய விசயமானு சரினு ஒத்துக்கிடுச்சு அந்த அந்த ,அன்னைல இருந்து அதிகமா சத்தம் போடுறத விட்டுட்டு அமைதியா கிளைல உக்காந்து நடக்குற விஷயங்க எல்லாத்தையும் கவனிக்க ஆரம்பிச்சது

ஆந்தையின் அறிவு - Owl Story In Tamil-

அப்ப அந்த மரத்தடியில் நடக்குற விஷயங்கள பாக்க பாக்க உண்மை அதுக்கு புரிய ஆரம்பிச்சது ,இங்க நிறையபேரு பேசுறது ஒன்னு செய்யிறது ஒண்ணா இருக்கு.

அவுங்க ஏன் ,எதுக்கு ,எப்படி இப்படி பேசுறாங்க ,இப்படி நடந்துக்கிறாங்கன்னு நிறைய கேள்விகள் ஆந்தைக்கு உருவாச்சு

அமைதியா மாறிப்போன ஆந்தைக்கு உலக அறிவு அதிகமா வளர ஆரம்பிச்சது.

ஆந்தையின் அறிவு - Owl Story In Tamil-

ஒரு வருஷம் கழிச்சு அங்க வந்த சாமியாருக்கு ஆந்தைய பாத்ததும் அதோட முகத்துல இருந்த தேஜஸ் அவருக்கு எல்லாத்தையும் சொல்லுச்சு

சும்மா சும்மா கத்திக்கிட்டு இருந்த ஆந்தை இதுஇல்லை ,எல்லா விஷயத்தையும் உடனே நம்பாம ஏன் எதுக்குன்னு கேட்டு புரிஞ்சிக்கிடுற பகுத்தறிவு கொண்ட ஒரு ஆந்தைனு

செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது
வயிற்றுக்கும் ஈயப் படும்