My School Essay in Tamil – எனது பள்ளி கட்டுரை:- எனது பள்ளி திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு அரசினர் உதவி பெரும் மேல்நிலைப்பள்ளி ஆகும். எனது பள்ளி 100 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி சேவையில் இருந்துவரும் ஒரு பழம்பெரும் கல்வி நிலையமாகும். எனது பள்ளியில் பயின்ற நிறைய மாணவர்கள் தற்போது அறிவியல் அறிஞர்களாகவும் விளையாட்டு வீரர்களாகவும் சினிமா துறை மற்றும் கலைத்துறையிலும் முன்னணியில் உள்ளனர்

எங்கள் பள்ளியில் உள்ள கட்டிடங்கள் புதுப்பிக்கப்பட்டு இருந்தபோதிலும் பழம்பெரும் கட்டிடக் கலைக்கு சான்றாக பல கட்டிடங்கள் உள்ளன சுதந்திரப் போராட்டத்திற்கு முன்பாகவே எங்கள் பள்ளி தொடங்கப்பட்டு விட்டதா எங்கள் பள்ளியில் சுதந்திர தினம் மற்றும் குடியரசு தினம் ஆண்டுதோறும் விமரிசையாக கொண்டாடப்படுகிறது
எங்கள் பள்ளியில் மிகப்பெரிய நூலகம் உண்டு அந்த நூலகத்தில் லட்சக்கணக்கான புத்தகங்கள் மாணவர்களின் பயன்பாட்டிற்காக பட்டியலிடப்பட்டு வைக்கப்பட்டுள்ளது அனைத்து மாணவர்களுக்கும் உபயோகப்படும் வகையில் இந்த நூலகத்தை பராமரித்து வருகிறது எங்கள் பள்ளி
எங்கள் பள்ளியில் அறிவியல் ஆய்வுக்கூடம் ஒவ்வொரு பாடத்திட்டம் உண்டு குறிப்பாக வேதியல் படத்திற்கு மிகப்பெரிய வேதியியல் ஆய்வு கூடமும் விலங்கியல் மற்றும் தாவரவியல் பாடத்திற்கு அது சம்பந்தமான மிகப்பெரிய ஆய்வுக் கூடமும் உண்டு மேலும் தற்போதைய காலகட்டத்தில் கணினி மற்றும் மின்னணுவியல் ஆய்வுக்கூடங்கள் மிகப்பெரிய அளவில் புதிய கட்டடத்தில் அமைக்கப்பட்டுள்ளது இந்த ஆய்வாளர்களுக்கு தனித்தனி ஆசிரியர்கள் மூலம் பராமரிப்பு செய்யப்படுகிறது
எங்கள் பள்ளியில் மிகப்பெரிய விளையாட்டு மைதானம் உண்டு இதன் காரணமாக எங்கள் மாவட்டத்தில் நடைபெறும் முக்கிய விளையாட்டுப்போட்டிகள் எங்கள் பள்ளியில்தான் நடைபெறும் இது போன்ற விளையாட்டு போட்டிகள் நடைபெறும் பொழுது அவற்றில் பார்வையாளர்களாக விளையாட்டு வீரர்களாகவும் கலந்து கொள்ள எங்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது. ஒவ்வொரு விளையாட்டுக்கும் தனித்தனி விளையாட்டு மைதானங்கள் சிறப்பாக அமைக்கப்பட்டு அதற்கான விளையாட்டு பொருட்களான பேட் பால் மற்றும் கவச உடைகளும் எங்கள் பள்ளியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது
எங்கள் பள்ளியின் ஆசிரியர்கள் மிகுந்த கனிவுடனும் கண்டிப்புடனும் எங்களை நடத்துகின்றனர் குறிப்பாக எங்கள் பள்ளியின் தலைமையாசிரியர் மாணவர்களின் நலன் கருதி அடிக்கடி ஆசிரியர் கூட்டம் நடக்கும் செயல்பட்டு வருகிறார்
எங்கள் பள்ளியில் நிறைய பொது குழுக்கள் உள்ளன இதில் பெற்றோர் ஆசிரியர் கழகம் ஆசிரியர் மாணவர் கழகம் அறிவியல் கழகம் ஆங்கில மொழி கழகம் போன்ற கழகங்கள் அமைக்கப்பட்டு மாணவர்களை இதில் இணைத்து அவர்களின் எதிர்கால வழிகாட்டுதல்களை நிறைவேற்றி வருகிறது. இது சம்பந்தமான கூட்டங்கள் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறுகிறது குறிப்பாக சென்ற ஆண்டு நடைபெற்ற ஆங்கில மொழி கழக கூட்டத்தில் தற்போது தமிழக அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் எங்கள் பகுதி முன்னாள் மாணவர்களை அழைத்து வந்து பேச வைத்தனர். அவர்கள் தமிழ் மொழி மட்டுமல்லாது ஆங்கில மொழியில் அவசியத்தையும் இரண்டு மொழி கற்கும் துணிவையும் எங்களுக்கு போதித்தனர்
எங்கள் பணியை கட்டுப்பாடுகளுக்கு மற்றும் ஒழுக்கத்திற்கு மிகவும் பெயர் போன பணியாகும். எங்கள் பள்ளியில் அனைத்து மாணவர்களும் ஒழுக்கத்துடன் இருக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். படிப்பு ஒருபுறமிருந்தாலும் ஒழுக்கம் மற்றும் நேர்மை போன்றவற்றை போதிக்கும் எனது பள்ளியில் பயில நான் மிகவும் பெருமை கொள்கிறேன்