My Mother Story – எனது அன்னை குழந்தை சிறுகதை :- ரம்யா அன்னைக்கு வேலைக்கான இன்டெர்வியூக்கு போனால்.
அவளோட செர்டிபிகேட் எல்லாத்தையும் பாத்த முதலாளி ரொம்ப சந்தோச பட்டாறு
இந்த வேலைக்கு நீ எல்லா விதத்துலயும் தகுதியானவல், நீ எப்படி இவ்வளவு நல்லா படிச்சா உங்க அப்பா உன்ன படிக்க வச்சாரான்னு கேட்டாரு
அதுக்கு ரம்யா எனக்கு அப்பா இல்ல எங்க அம்மா தான் என்ன படிக்க வச்சாங்க அப்படினு சொன்னால்
அவளை நல்லா உத்து பாத்த முதலாளி டிரஸ் எல்லாம் நல்லா போட்டுருக்கியே யாரு தொவச்சதுன்னு கேட்டாரு அதுக்கும் எங்க அம்மாதான்னு பதில் சொன்னா ரம்யா
எங்க உன் கைய காமினி சொன்னாரு ,தன்னோட மிருதுவான கைய காமிச்சா ரம்யா,
அடடா மிகவும் மிருதுவான கை உங்க குடும்பத்துல இருக்கவங்களுக்கு இருக்கும் போல , நீ நாளைக்கு வேலைக்கு வா வரும்போது உங்க அம்மா கையும் இதுமாதிரி மிருதுவா இருக்கான்னு பாத்துட்டு வானு சொன்னாரு
வீட்டுக்கு சந்தோசமா வந்த ரம்யா அவுங்க அம்மா கைய பாத்தா அது காய் காச்சு ரொம்ப கடினமா இருந்துச்சு
அப்பதான் ரம்யாவுக்கு அவுங்க அம்மாவை பத்தி தெரிஞ்சது அப்பா இல்லாத குறை தெரியாம தன்னை வளர்க்குறதுக்கு அம்மா ரொம்ப கஷ்டப்பட்டுஇருக்காங்க
ஒவ்வொரு வேலையும் தன்னை செய்ய விடாம அவுங்களே கஷ்டப்பட்டு செஞ்சிருக்காங்கன்னு அவளுக்கு தெறிச்சு ரொம்ப வறுத்த பட்டா
அன்னைக்கு தொவைக்குறதுக்கு ஊற வச்சிருந்த துணிய தானே துவைக்க ரம்யா
மறுநாள் வேலைக்கு போன ரம்யா கிட்ட அந்த முதலாளி அடடா தூய வெள்ளை உடை உடுத்தி இருக்கியா இத யார் தொவைச்சான்னு கேட்டாரு
இது எங்க அம்மாவுக்கு தொந்தரவு செய்யாம நானே தொவச்சதுன்னு சொன்னா
இத கேட்ட முதலாளி உங்க அம்மாவோட கஷ்டத்தை நீ புரிச்சிக்கிட்ட இதேமாதிரி இங்க வேலைபாக்குற தொழிலாளிங்க கஷ்டத்தையும் புரிச்சு நடந்துக்கணு சொல்லி அவளுக்கு வேலைகொடுத்தாறு