எனக்கு பிடித்த பாடம் கட்டுரை – My Favourite Subject Essay in Tamil:- ஒவ்வொரு மாணவருக்கு தமக்கு பிடித்த பாடம் என்று எப்போதும் இருக்கும்.அந்த பாடத்தில் அந்த மாணவர் சிறந்த மதிப்பெண் பெறுவது மட்டுமல்ல அந்த பாடத்தை குதூகலத்துடன் பயில்வார்.அந்த பாடத்தை நடத்தும் ஆசிரியர்கள் ,அந்த பாடம் சம்பந்தமான நிகழ்வுகளில் அவரது கவனம் மிக அதீதமாக இருக்கும்

அந்த வகையில் எனக்கு மிகவும் பிடித்த பாடம் ஆங்கிலமாகும்.ஆங்கிலத்தில் மிக அதிக மதிப்பெண் பெறுவதால் அந்த பாடம் பிடிக்கும் என்றும் அதற்க்கு பொருளாகாது. ஆங்கிலத்தில் மிக அதீத ஆர்வம் கொடுத்தாலேயே அந்த பாடத்தில் அதிக மதிப்பெண் என்னால் பெற முடிகிறது.

பொதுவாக அனைத்து மாணவர்களையும் போல எனக்கு தொடர்ந்து பாடம் படிப்பது பொதுவாக சலிப்பு ஏற்படுத்தும் நிகழ்வாகும் .அதே நேரத்தில் எவ்வளவு நேரம் படித்தாலும் ஆங்கில பாடம் மட்டும் எனக்கு சலிப்பு ஏற்படுவதில்லை.

ஆங்கிலத்தை சிறந்த பாடமாக நான் கருதுவதற்கு நிறைய கரணங்கள் உள்ளன .சிறு வயது முதலே ஆங்கிலத்தில் கிடைக்கும் குழந்தைகள் சிறுகதைகளை படிக்க உதவுவதாலும்.மற்றோரு மொழியை கற்றுக்கொள்ளும் முனைப்பில் ஆங்கிலம் எனக்கு எளிதாக இருந்ததாலும் ஆங்கில பாடம் எனக்கு சிறந்ததாக அமைந்தது
தமிழக மாணவனான எனக்கு ஆங்கில கல்வி முறை படி பாடம் நடத்த படுவதால் ,ஆங்கில அறிவை வளர்த்து கொள்ள எனது ஆர்வம் ஆங்கில படத்தின் மீது திரும்பியது

எனது இளவயது ஆங்கில ஆசிரியர்கள் ஆங்கிலத்தை புரிந்துகொள்ள மிக உதவியாக இருந்தனர் .ஆங்கிலத்தை பயில்வது ஆங்கில புலமையை வளர்த்து கொள்வதோடு மட்டுமல்லாது .வேற்றுமையில் ஒற்றுமை என்ற இந்திய பண்பாட்டில் அனைத்து மாநில மனிதர்களுடனும் நட்பு பாராட்ட சிறந்த மொழி அறிவாக எனக்கு உதவிய ஆங்கிலத்தை கற்பதில் நான் மிகுந்த ஆர்வம் கொள்கிறேன்