பாட்டு கச்சேரி-சிறுவர்மலர் கதைகள் -Musicians Of Bremen Story in Tamil:- முன்னொரு காலத்துல ஒரு விவசாயி இருந்தாரு ,அவரு ஒரு கழுதைய வளத்துக்கிட்டு வந்தாரு ,

அந்த கழுதைக்கு ரொம்ப வசாயசானதால அந்த கழுதைய கொன்னு அதோட தோல உருச்சி வித்துடலாம்னு நினைச்சாரு.முதலாளியோட இந்த எண்ணத்த புரிஞ்சிகிட்ட கழுத்த , நான் பட்டணத்துக்கு போயி பாட்டு கச்சேரி பண்ண போறேன்னு சொல்லிட்டு ஓட ஆரம்பிச்சுச்சு

போற வழியில ஒரு வயசான நாய பாத்துச்சு அந்த கழுத,இங்க என்ன பண்ணுற நாயாரேனு கேட்டுச்சு கழுத,அதுக்கு அந்த நாய் சொல்லுச்சு எனக்கு வயசாகிடுச்சு என்னால முன்னமாதிரி காவல் காக்க முடியலன்னு ,உடனே கழுத சொல்லுச்சு முயற்சிய விடக்கூடாது நாயாரே என்கூட வாங்க நாம பட்டணத்துக்கு போயி பாட்டு கச்சேரி பண்ணலாம்னு சொல்லுச்சு

வயசான காலத்துல ஒரு துணை கிடைச்ச சந்தோஷத்துல அந்த நாயும் கழுத கூட சேந்து பட்டணத்துக்கு நடக்க ஆரம்பிச்சுச்சு,அப்பதான் அங்க ஒரு வயசான பூனைய பாத்தாங்க ,பூனையாரே பூனையாரே இங்க என்ன பண்றீங்கனு கேட்டுச்சு கழுத

எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு எனக்கு சாப்பாட்டுக்கே கஷ்டம்னு சொல்லுச்சு அந்த பூனை, உடனே கழுத சொல்லுச்சு முயற்சிய விடக்கூடாது பூனையாரே என்கூட வாங்க நாம பட்டணத்துக்கு போயி பாட்டு கச்சேரி பண்ணலாம்னு சொல்லுச்சுங்க நாயும் கழுதையும்.

போற வழியில ஒரு வயசான சேவல பாத்துச்சு அந்த கழுத,இங்க என்ன பண்ணுற சேவலாரே கேட்டுச்சு கழுத . எனக்கு ரொம்ப வயசாயிடுச்சு என்னால இறை தேட கூட முடியலன்னு சொல்லுச்சு அந்த சேவல் ,

உடனே கழுத சொல்லுச்சு முயற்சிய விடக்கூடாது சேவலாரே என்கூட வாங்க நாம பட்டணத்துக்கு போயி பாட்டு கச்சேரி பண்ணலாம்னு சொல்லுச்சுங்க நாயும் கழுதையும் பூனையும்

சேவலும் ,நாயும் ,பூனையும் ,கழுதையும் ஒண்ணா சேந்து பட்டணத்த நோக்கி நடக்க ஆரம்பிச்சதுங்க ,நடக்க நடக்க எல்லாருக்கும் பசிக்க ஆரம்பிச்சுச்சு

கொஞ்ச நேரத்துல இருட்ட ஆரம்பிச்சுச்சு,அப்பத்தான் தூரத்துல ஒரு வீடு இருக்குறத பாத்தாங்க ,அங்க போனா நமக்கு உணவு கிடைக்கும்னு சொல்லுச்சு நாய்

வீட்டுக்கிட்ட போன எல்லாரும் ,அந்த வீடு உள்பக்கமா பூட்டி இருக்குறத பாத்தாங்க,

உடனே பூன பக்கத்துல இருக்குற மரத்து மேல ஏறி வீட்டு ஜன்னல் வழியா பாத்துச்சு

அங்க ஒரு திருடர்கள் கூட்டம் நிறைய பணத்தோடயும் ,தங்க நகைகளோடயும் உக்காந்து சாப்டுகிட்டு இருந்தாங்க

உடனே கழுத சொல்லுச்சு நாம அந்த திருடர் கூட்டத்த சந்தோச படுத்த ஒரு பாட்டு கச்சேரி நடத்துவோம்,அப்பத்தான் எல்லா திருடர்களும் குஷியாகி நமக்கு சாப்பாடு கொடுப்பாங்கன்னு சொல்லுச்சு

உடனே கழுத மேல நாய் ஏறிக்கிடுச்சு ,நாய் மேல பூன ஏறிக்கிடுச்சு ,பூன மேல சேவல் ஏறிக்கிடுச்சு ,அப்படியே அந்த ஜன்னல் பக்கமா வந்து பாட்டு பாட ஆரம்பிச்சதுங்க.

என்ன தான் அதுங்களோட குரலுக்கு அது பாட்டா தெரிஞ்சாலும் அந்த திருடர்களுக்கு அந்த சத்தம் ரொம்ப கேவலமா கேட்டுச்சு ,
இது என்ன வித்தியாசமான சத்தமா இருக்கு நம்மள பிடிக்க யாரும் வந்துருக்கன்ளோனு சந்தேக பட்டு அந்த வீட்ட விட்டு வெளிய ஓட அடம்பிச்சாங்க அந்த திருடர்கள்

மெதுவா வாசலுக்கு வந்த பாட்டு கச்சேரி கூட்டம் ,அந்த வீட்டுல இருந்த எல்லாரும் எங்க போனாங்கன்னு தேடி பாத்துச்சுங்க ,உள்ள யாரும் இல்லாதத பாத்து சந்தோச பட்டு உள்ள இருக்குற சாப்பிட சாப்பிட ஆரம்பிச்சுச்சுங்க.

நல்லா சாப்பிட்டுட்டு விளக்க அணைச்சிட்டு தூங்க ஆரம்பிச்சுச்சுங்க நாயும் ,பூனையும் ,சேவலும் ,கழுதையும்.விளக்கு அணைக்க பட்டத்த தூரத்துல இருந்து பாத்த திருடர்கள் ,இது யாரு நம்ம வீட்டுக்குள்ள போய் விளக்க அணிக்குறதுன்னு குழப்பத்தோட பாத்தாங்க.

அந்த கூட்டத்துல இருந்து ஒரு திருடன் மட்டும் மெதுவா நடந்து வீட்டுக்குள்ள போனான்,

வீடு இருட்டா இருந்ததால மெழுகுவர்த்திய தேடுனாண் ,

மேஜ மேல படுத்திருந்த பூனையோட வால பாத்து அது திரினு நினச்சு,தீப்பட்டிய எடுத்து பத்த வச்சான் ,உடனே கோபமான அந்த பூன அவன் மேல விழுந்துபிராண்டுச்சு

இருட்டுல கண்ணு தெரியாத திருடன் கீழ படுத்திருந்த நாயோட வால தெரியாம மிதிச்சுட்டான் ,கோபமான அந்த நாய் அவன நல்லா கடிச்சு வச்சுடுச்சு ,

இந்த சத்தத்தை கேட்ட சேவல் திருடன் மேல ஏறி அவனோட தலைல கொத்த ஆரம்பிச்சது ,

பின்னாடி வந்த அந்த கழுத திருடன பின்னாடி ஒரே முட்டா முட்டுச்சு ,பயந்து போய் கீழ விழுந்த திருடன் வேகமா எழுந்திருச்சு காட்டுக்குள்ள ஓடி போனான் ,அவனுக்கு இருட்டுல கண்ணு தெரியாததால அந்த மிருகங்களை பாக்க முடில தன்ன யாரோ அடிச்சுட்டாங்க அப்படினு நினைச்சான்

தொடர்கள் கூடத்துக்கு வந்த அடிபட்ட திருடன் சொன்னான் உள்ள யாரோ பலசாலிகள் இருக்காங்க ,என்ன இருட்டுலயே போட்டு அடிச்சுட்டாங்க, இங்க பாருங்க என்னோட முகத்துல காயதன்னு காட்டுனான்

அந்த காயத்தை பாத்த எல்லாரும் அடடா இது ரொம்ப மோசமான காயமா இருக்கே உள்ள போனா நம்மளையும் அந்த பலசாலி அடிச்சுடுவானு நினைச்சாங்க ,திருடுன பொருள் போனா போகட்டும் நாம வெளியில ஓடி போயி எப்படியாவது பொழச்சுக்கலாம்னு சொல்லிட்டு குதிரையை எடுத்துக்கிட்டு காட்டு வழியா அடுத்த ஊருக்கு போய்ட்டாங்க

இது எதுவுமே தெரியாத பாட்டு கச்சேரி கூட்டம் ,அந்த திருடர்கள் நம்மோட பாட்டு திறமையை பாத்து நமக்காக அவுங்க வீட்டையும் பொன்னையும் பொருளையும் விட்டு கொடுத்திருக்காங்க அப்படினு நினச்சதுங்க,அங்க இருக்குற சாப்படையும் ,பணத்தையும் வச்சு கடைசி காலம் வரைக்கும் சந்தோசமா வாழ்துசுங்க

very good