Moral Stories in Tamil -டிவி பார்தல்
ஒரு ஊருல ராமுனு ஒரு பையன் வாழ்ந்துட்டு வந்தான்.
அவன் எப்பவும் டிவி பாக்குறது, மொபைல் நோன்றதுனே இருப்பான்,
இந்த கெட்ட பழக்கத்த தடுக்கணும்னு அவுங்க அப்பா ரொம்ப ஆச பட்டாரு.
அதனால அவனோட தாத்தா கிட்ட போயி அவன் செய்யிறத சொன்னாரு,அதைக்கேட்ட அந்த தாத்தா அவனுக்கு நான் புத்தி சொல்றேன்னு சொன்னாரு
மறுநாள் ராமுவை அவுங்க தாத்தா வீட்டில விட்டுட்டு அவுங்க அப்பா போயிட்டாரு.
ராமுவும் அவுங்க தாத்தாவும் பக்கத்து தோட்டத்துல மெதுவா நடந்து போனாங்க.அப்ப அங்க ஒரு சின்ன மாமர செடி இருந்துச்சு.
அத பத்த அந்த தாத்தா ராமு அந்த செடியை கொஞ்சம் பிடுங்குனு சொன்னாரு, உடனே ராமு அந்த செடியை ஈஸியா பிடிங்கிட்டான்.
கொஞ்ச தூரம் போனதுக்கு அப்புறமா ஒரு பெரிய செடி இருந்துச்சு,இந்த செடியையும் பிடுங்குனு தாத்தா சொன்னாரு,அதைக்கேட்ட ராமு அத பிடுங்க ஆரம்பிச்சான்,ஆனா அவனால முடியல.
அப்ப அந்த தாத்தா சொன்னாரு ராமு நீ செய்ர கேட்ட பழக்க வழக்கங்கள் இந்த செடியோட வெர்மாதிரி உன் வாழ்க்கைல ஆழமான பாதிப்ப உண்டாக்கும்.
அதனால டிவி பாக்குறது ,அளவுக்கு அதிகமா போன் நோன்றது எல்லாத்தையும் அந்த சின்ன செடி மாதிரி பாதிப்பு அதிகம் ஏற்படுறதுக்கு முன்னாடி தடுத்துடு அப்படினு சொன்னாரு
இத கேட்ட ராமு தன்னோட தவற உணர்ந்து திருந்தி வாழ்ந்தான்