Not Worthless – Monkey and Fish Kids Story- குரங்கும் மீனும் சிறுவர் கதை:- ஒரு ஆத்துல ஒரு மீன் நீந்திக்கிட்டு இருந்துச்சு அப்ப அதுகிட்ட யாரோ பேசுற மாதிரி கேட்டுச்சு
உடனே தலைய வெளிய எட்டி பாத்துச்சு, அங்க ஒரு மரத்துமேல ஒரு குரங்கு உக்காந்து இருந்துச்சு
அந்த கொரங்கு கேட்டுச்சு ஏம்ப்பா தண்ணி எப்படி இருக்குன்னு கேட்டுச்சு
அட ரொம்ப நல்லா இருக்குனு மீன் சொல்லுச்சு, அதுக்கு அந்த குரங்கு நீ இந்த மரத்து மேல வந்துபாரு இந்த ஆத்தோட அழகு ரொம்ப நல்லா இருக்கு அப்படினு சொல்லுச்சு அந்த கொரங்கு
அத கேட்ட மீன் என்னாலே மரத்து மேல வர முடியாதேன்னு சொல்லுச்சு
அதுக்கு அந்த கொரங்கு சொல்லுச்சு உனக்கு மரம் எற தெரியாதுன்னு சொல்லி சிரிச்சுச்சு
இத கேட்ட மீன் உண்மையாவே மரம் எற தெரியாதுங்குறது பெரிய குற்றமொன்னு நினச்சுச்சு
தனக்கு மரம் ஏற தெரியாதத நினச்சு நினச்சு வருத்தப்பட்டுச்சு
அப்பதான் இன்னொரு புத்திசாலி மீன் இந்த மீன பாத்து கேட்டுச்சு
ஏன் இப்பலாம் நீ ரொம்ப சோகமா இருக்கானு கேட்டுச்சு
அதுக்கு அந்த மீன் நடந்தத சொல்லுச்சு
அட பைத்தியக்கார மீனே கடவுள் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு திறமைய கொடுத்துருக்காரு
நீச்சலடிக்க தெரிஞ்ச மீனாலதான் தண்ணில வாழ முடியும் அதனால நமக்கு நீச்சல் திறமையை கொடுத்திருக்காரு
நாம எப்பவும் மரத்து மேல வாழ போறது இல்ல அதனால நமக்கு மரம் ஏறுற திறமைய கடவுள் கொடுக்கல இதுக்கு நீ வருத்தப்பட கூடாது
நீ ஒரு விஷயத்தை கவனிச்சிய அவ்வளவு வாய் பேசுன அந்த கொரங்கால நீச்சல் அடிக்க தெரியுமா
ஏன் அந்த குரங்குக்கு நீச்சல் திறமையை கடவுள் கொடுக்கலான அதோட வாழ்க்கை தண்ணில இல்ல அப்படினு சொல்ழுச்சு
அதுக்கு அப்புறமா ஒருநாள் அந்த கொரங்கு தவறி தண்ணில விழுந்து கஷ்டப்பட்டு வெளிய போச்சு
இத பாத்த மீன் அப்பதான் தன்னோட நண்பன் சொன்னது எவ்வளவு உண்மைங்கிறத புரிஞ்சுக்கிடுச்சு