ஒரு பால்காரர் ஒரு கிராமத்துல வாழ்ந்துகிட்டு வந்தாரு
அவரோட தினசரி வேலை என்னென்ன மாடுகள்ட்ட இருந்து பாலா கறந்து
பக்கத்துக்கு சந்தைல கொண்டு போயி வித்துட்டு வருவாரு
பால் வித்து சம்பாதிச்ச பணத்தை என்ன செய்றதுன்னு எப்பவுமே அவருக்கு குழப்பம் தான்
சிலநாள் அவருக்கு புடிச்ச பிரட் வாங்குவாரு சிலநாள் பழங்கள்வாங்குவர்
ஒரு நாள் அங்க ஒரு கோழியை பாத்தாரு
உடனே அவருக்கு ஒரு யோசனை வந்துச்சு
அடடா நாம ஏன் ஒரு கோழியை வாங்க கூடாது
நாம ஒரு கோழி வாங்குனம்னா அது நிறைய முட்ட போடும்
அந்த முட்டையை வித்திட்டு நிறைய பணம் சம்பாதிக்கலாம்
அந்த முட்டைல சில குஞ்சி பொரிக்கும் அந்த கோழி குஞ்சுங்க பெருசாகி
பெரிய கோழியா மாறும் அந்த கோழிங்க எல்லாம் இன்னும் நிறைய முட்ட போடும்
அந்த முட்டைங்க எல்லாத்தையும் வித்து நாம நல்ல பணக்காரனா
மாறலாம்னு நினைச்சுகிட்டு இருக்கும்போது அவரு கொண்டு வந்த பால் பாத்திரம் கீழ விழுந்து கொட்டி போச்சு
வெறும் கையோட வீட்டுக்கு வந்த அந்த பால் வியாபாரியோட அம்மா நடந்ததா எல்லாம் கேட்டு சிரிச்சாங்க
ஒரு விஷயம் நடக்குறதுக்கு முன்னாடி நிறைய யோசிக்க கூடாது ,அதுக்காக நிறைய உழைக்கணும் அப்பத்தா எல்லாமே நினைச்ச படி நடக்கும்