Mariyathai Raman and the Stolen Gold Coins – மரியாதையை ராமன் கதை :- மரியாதை ராமன் வாழ்ந்து கிட்டு வந்த ஊருல ஒரு சந்தை இருந்துச்சு
அங்க ஒரு எண்ணை வியாபாரியும் மாவு வியாபாரியும் வியாபாரம் செஞ்சுகிட்டு வந்தாங்க
அந்த எண்ணை வியாபாரி அசந்து இருக்குற சமயத்துல அந்த மாவு வியாபாரி எண்ண வியாபாரி வச்சிருந்த காச எடுத்து தன்னோட வச்சுக்கிட்டான் இது தினமும் நடந்துக்கிட்டே இருந்துச்சு
தன்னோட வியாபாரத்துல வர்ற வருமானத்தை கணக்கு பார்த்தப்பாதான் அந்த எண்ணை வியாபாரிக்கு இது புரிஞ்சிச்சி
உடனே மரியாதை ராமன் கிட்ட போய் முறையிட்டாரு அந்த எண்ண வியாபாரி
மறுநாள் சந்தைக்கு வந்த மரியாதை ராமன் மாவு வியாபாரிய பார்த்து விசாரிச்சாரு
அதுக்கு அந்த மாவு வியாபாரி தான் எந்த காசையும் எடுக்கலைனு சொல்லி அழுதான்
அவனோட பேச்ச நம்பாத மரியாதை ராமன் ஒரு பானைல நிறய தண்ணி கொண்டு வர சொன்னாரு
உடனே ஊர் காரங்க ஒரு பானை நிறய தண்ணி கொண்டுவந்தாங்க ,மாவு வியாபாரி வச்சிருந்த காசு எல்லாத்தையும் அந்த பானை குள்ள போடா சொன்னாரு மரியாதை ராமன்
மாவு வியாபாரியும் அதே மாதிரி செஞ்சாரு ,அப்பத்தான் அந்த நாணயத்துல இருந்த எண்ணெய் எல்லாம் தண்ணிக்கு மேல மிதக்க ஆரம்பிச்சுச்சு
மாவு வியாபாரி சம்பாதிச்ச காசுல எண்னை ஒட்டி இருக்க வேண்டிய அவசியம் இல்லை ,ஆனா எண்ணெய் வியாபாரம் செஞ்ச நாணயத்துல கண்டிப்பா எண்ணெய் ஒட்டி இருக்கும்
அதனால இது நீ எண்ணெய் வியாபாரி கிட்ட இருந்து திருடுன காசுதானு சொல்லி அவனை காவலர்கள் கிட்ட ஒப்படைச்சாரு மரியாதை ராமன்